பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 35

ஞானப்பால் உண்டவர்; அதனால் அவர் பாட்டை முன் வைத்துவிட்டார் என்பர்.

சம்பந்தர் பாட்டை முன் வைத்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. திருநாவுக்கரசரின் முதற்பாட்டு எடுத்த எடுப்பில் 'கூற்றுவன் போலிருக்கிற நோயை விலக்காமலிருக்கிறீரே நான் பிறர்க்குக் கொடுமை செய்ததே இல்லையே! இன்ன காரணம் என்று அறிய முடியாதபடி வந்த இந்நோய் குடருடன் கூடி முடக்கி விருத்த ஆற்றேனே! அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! இந்நோயை விலக்கியருளுக. விலக்கினால் உம் திருவடியை இரவும் பகலும் பிரியாது எப்பொழுதும் வணங்கி வருவேன் என்று பிணியும் வருத்தமும் பற்றித் தோன்றிய இளிவர ல் என்னும் மெய்ப்பாட்டிற்குரியதாகக் கூறுகின்றார். கூற்று என்னும் அமங்கலச் சொல்லுடன் இளிவரல் என்னும் மெய்ப்பாடும் தோன்றப் பாடிய இப்பாட்டை முதலிலே வைக்க நம்பியார் துணியவில்லை. திருநாவுக்கரசர் பாடல்களில் பின்னுள்ள பாடல்களெல் லாம் மிகமிகச் சிறந்திருக்கவும் முதற்பாட்டு சிறவாமை யினால் நம்பியால் முதலிலே வைக்க இயலவில்லை என்று கருதுகிறேன். மேலும், ஞானசம்பந்தர் என்றதில் ஞானம் உள்ளத்தைப்பற்றியது; நாவுக்கரசர் என்றதில் நாவு சொல்லைப் பற்றியது; சுந்தரமூர்த்தி என்பதில் சுந்தரம் (அழகு) உடம்பைப் பற்றியது. அதனால் மனம், வாக்கு, காயம் என்ற முறைப்படி மூவர் தேவாரமும் முறையாக வைக்கப்பட்டது என்றும் அறிஞர் கூறுகின்றனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல்களில் முதற்பாட்டு பித்தா என்பது. தன்னைப் பித்தா என்று கூறியதால் அச்சொல்லையே முன்வைத்து எம்மைப் பாடுக என்று கட்டளையிட்டவாறு சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்