பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சமயந்தொறும் நின்ற தையலாள்

எனச் சுந்தரர் திருநாவலூர் புகுந்து தேவாரத் திருமழை யால் இறைவனைப் போற்றியமையை உணர்த்துகின்றார் சேக்கிழார்.

திருத்துறையூர் சென்றணைதல்

திருவெண்ணெய் நல்லூரில் தேவாரத் திருப்பதிகம் பாடி இறைவனைப் போற்றியவர் அடுத்து பெண்ணை யாற்றிற்கு வடகரையில் உள்ளதும், நடுநாட்டுத் தலங்களில் பதினைந்தாவது தலமும், தற்போது திருத் தனுார் என வழங்கப்படுவதுமாய திருத்துறையூர்த் தலம் சென்றனைகின்றார். சிவனுறையும் அத்தலத்தைச் சார்ந்து தம்பிரான் முன்னின்றும் தீவினைப்பயனால் அவ நெறியில் செல்லாமல்தன்னைத் தடுத்து ஆளாகக்கொண்ட அடியவனாய தனக்கு புலன்வழிச் செல்லாது மனத்தை ஒன்றுவித்துச் சிவபெருமானை இடைவிடாது நினைத் தலும் பூசித்தலுமாய தவநெறியினைத் தந்தருள வேண்டும் என வேண்டிப் பிற உயிர்களையும் பல நெறி யினின்றும் விளக்கியாளக்கூடிய திருப்பதிகத்தினைப் பாடுகின்றார். இதனை,

சிவனுறையுந் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால் அவநெறியிற் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத் தவநெறிதந் தருளென்று தம்பிரான் முன்னின்று பவநெறிக்கு விலக்காருந் திருப்பதிகம் பாடினார் (78) என்ற பாடலால் தெளியலாம்.

தவநெறி தந்தருள் என்று பவநெறிக்கு விலக்காகுந்

திருப்பதிகத்தைச் சுந்தரர் பாடிய அளவில் புலனொன்றும் படி தவத்திற் புரிந்த நெறி கொடுத்தருள சுந்தரர்