பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§.com. 41

அலர்கொண்ட நறுஞ்சோலைத் திருத்துறையூர்

அமர்ந்துன்னருளும் நிலவுந்தண் புனலுமொளிர் நீள்சடையோன்

ஆய சிவனின் திருப்பாத மலர்களை உள்ளத்தே சூடி, வாக்கினாற் போற்றிக் கைகளால் ஆர வந்தனை செய்து சிவபூசை செய்கின்றார். i

புலியூர்ப்புறப்பாடு

திருத்துறையூர்ப் பெம்மானைப் பணிந்து பின் சிவபெருமான் அமர்ந்தருளும் இடம் பலவும் புக்கு இறைஞ்சிப் பின் - #

பொற்புலியூர், நிருத்தனார் திருக்கூத்துத் தொழு வதற்கு நினைவுற்று வருத்தமிகு காதலினால் புறப்பட்டுச் செல்ல விழைகின்றார்.

திருவதிகைப் புறம் சார்தல்

பொற்புலியூர் நிருத்தனாரைக் கண்களால் கண்டு மகிழ எண்ணி வழிக் கொள்ள மனங்கொண்ட சுந்தரர் புறப்பட்டுப் பெண்ணையாற்றைக்கடந்து கரையேறிய பின் மாலைப் பொழுதிலே திருவதிகை வீரட்டானத்தின் புற எல்லையை அணைந்தார். இதனை,

மலைவளர்சந் தகில்பீலி மலர்பரப்பி மணிகொழிக்கும் அலைதருதன் புனற்பெண்ணை மாறுகடந் தேறியஎன் நிலவுபசும் புரவிநெடுங் தேரிரசி மேல்கடலிற் செலவணையும் பொழுதணையத் திருவதிகைப்

புறத்தணைந்தார் -பெரியபுராணம்; தடுத்தாட்கொண்ட படலம் :82

என்ற பாடல்வழித் தெளியலாம்.