பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 + சமயந்தொறும் நின்ற தையலாள்

H + 4 + + H. H. H. A போர்வலித் தோன்மாவலிதன் மங்கல வேள் வியிற்பண்டு வாமனனாய் மண்ணிரந்த

செங்கணவின் வழிபட்ட திரு மாணிக் குழி (90)

என்ற அடிகளில் புலப்படுத்துகின்றார்.

தினைநகர் சார்தல்

திருமாணிக்குழியில் பரம்பொருளைப்பணிந்து தாள் பரவிய பின்னர் பணிந்தவர்க்கும் வரம்தருகின்ற இறைவன் மேவி இருக்கின்ற தினை நகரை வணங்கிக் கொண்டு செல்கின்றார். சென்றவர் நரம்புடை யாழொலி, நாத வொலி, வேத ஒலி, அரம்பையர்தம் கீதவொலி அறாத் தில்லையைச் சென்று சேர்கின்றார்

தில்லை சென்றணைதல்

திருத்தினை நகரை வணங்கிப் பின் தில்லையைச் சென்றணைந்தவர் செந்தாமரைப் பூக்கள் அசையும்படி அழகிய கயல்மீன்கள் எதிர்ப்பாய அதனாலே வண்டுகளும் நீர்ப்பறவைகளும் ஒலிக்கும் வாவியினின்றும் அலை களினால் வெள்ளிய சங்குகளும், அசையும் மலங்கு மீன் களும் பரந்த வயல்களிற் சூழ்தற்கிடமாகிய தனது மருங்கிலே போந்து வணங்குபவர்களுடைய மூன்று மலங் களையும் போக்கி வீட்டினை அருள்கின்றதில்லை என்னும் செழும்பதியினது எல்லையை வணங்கிக்கொண்டு நாவல், மா முதலிய மரங்கள் எவ்விடத்தும் செறிந்து மேல்மண்டலம் வரை ஓங்கி வளர்ந்த சோலைகளாகி அவற்றில் குயில்கள் கூவ, தேவலோகத்தினும் மிக்க பொலிவுடன் விளங்கும் அழகிய புறம்பணையையும் கடந்து உட்செல்கின்றார்.