பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி LIIT", 49

நம் ஆரூரன் நாம் அழைக்க வாரா நின்ற அவனை மகிழ்ந்து எதிர்கொள்வீர்” என்ற இறைவனின் அருட் செயலுக்கு ஏற்ப எம்பிரானார் அருள்தானிருந்த பரிசு இதுவானால் நம்பிரானாவார் அவரென்ற கருத்தை உட்கொண்டு திருத்தொண்டர்கள் திருநாவலுாராளியை எதிர்கொண்டழைக்க எழுகின்றனர்.

எழுந்தவர்கள் மாளிகைகள், மண்டபங்களின் மருங்கு களில் பெருங்கொடிகளை நெருங்க அமைத்தும், நீண்ட தோரணங்களை நாட்டியும், இலைகளடர்ந்த கமுகு வகை களையும், தழைகளாற் செருக்கப்பட்ட மாலைகளையும் நீளிலையுடைய வாழை மரங்களையும், நீர் நிறைந்த பசும் பொற் கலசங்களையும் வரிசைப்பட வைத்த மணிகளாய விளக்குகளையும் ஓங்கிய வாயில்கள் எங்கும் வைத்து அமைத்தனர்.

வாயில்களுக்கு அடுத்து உள்ள திண்ணைகளில் சந்தனத்தால் மெழுகிப் பொற்சுண்ண முதலியவற்றாற் கோலம் பரப்பிப் புதுப்புதுப் பந்தர் இட்டு வீதிகளிற் பனிநீர் தெளித்தார்கள்.

பின்னர் பாடுவோரைக் கீதம்படச் செய்தும், முழக்கு வோரைத் துாரியம் முழக்கச் செய்தும், ஆடற்பெண்களை நடம்பயிலச் செய்தும் ஆரூர் வாழ்வார் நகரின் மதிற்புற வாயிலில் நம்பிகளை எதிர்கொண்டழைக்கின்றனர்.

அவ்வாறு தம்மை எதிர்கொண்டு வணங்குபவரை அஞ்சலி செய்து வணங்கிப் பின்,

எங்தை யிருப்பது மாருர வர்

எம்மையும் ஆள்வரோ கேளீர்

என்னும் சந்த இசைத் திருப்பதிகங்கள் பாடித் தம் பெருமான் திருவாயில் சார்கின்றார். சார்ந்தவர்.