பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o * o, சி.பா. 51

மதித்து தாள்கமலப் பதி தந்தது இறைவனின் கருணை யின் விளைவே என்று போற்றித் துதிக்கின்றார் இவ்வாறு பலமுறையாலும் வணங்கி உள்ளக் களிப்பினோடும் திருமூலட்டான நாதர் சந்நிதியினின்று நடந்து சென்று வீதி விடங்கராய தியாகேச சந்நிதியிற் போய் வணங்கியும் துதித்தும் பின் திருமாளிகையை வலம்செய்து வெளியே வருகின்றார். அது முதல் அடியவர்கள் அவரைத் தம்பிரான் தோழர் என அழைக்கின்றார். சுந்தரரும் இறைவன் தம் தாள்களையே நினைப்பவராய் புற்றிடங் கொண்டாரை நாள்தோறும் வணங்கிப் பாடித் துதித்து அதனாலுண்டாய இன்பத்தில் மூழ்கி வாழ்ந்து வருகின்றார்.

முடிவுரை

இவ்வாறாகத் திருநாவலூர் கோனாய சுந்தரர் திருவெண்ணெய் நல்லூரினின்றும் புறப்பட்டுத் திருநாவ லூர் திருத்துறையூர், திருத்தில்லை, திருவதிகை, திருமாணிக்குழி, திருத்தினை நகர், சீ கா ழி, திருக் கோலக்கா, திருப்புன்கூர், திருஅம்பர் மாகirளம், திருப் புகலூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருவாரூர்த் திருத்தலத்தை அடைகின்றார் எனச் சேக்கிழார் சுந்தரரின் திருத்தலப் பயணத்தை விரித்துரைக் கின்றார்.