பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 57

...........என் அடியான்இந் நாவல்நகர் ஊரன் இது நான் மொழிவது

எனக் கூறுகின்றார்.

சுந்தரரின் மெய்ப்பாடு

சிவன் தனக்குச் சுந்தரர் அடிமை என்று கூறக் கேட்ட

அளவில் அங்கிருந்தவர்களும், நாவலுாராரும் அடைந்த நிலையை,

நின்றார் இருந்தார் இவன் என்னினைக் தான் கொல்லென்று சென்றார் வெகுண்டார் சிரித்தார் திருநாவலூரான் நன்றால் மறையோன் மொழியென் றெதிர்நோக்கி நக்கான்

எனக் காட்டுகின்றார்,

சிவபெருமான் ஆளோலை காட்டல்

தனக்கு நாவல் நகர் ஆரூரன் அடிமை என்று கூறக் கேட்ட அளவில் நகை முகம் காட்டிய சுந்தரரை நோக்கிச் சிவபெருமான்,

அக்காலம் உன்தந்தை தன் தந்தை ஆள் ஒலை ஈதால் இக் காரியத்தை நீ இன்று சிரித்ததென் ஏட

எனத் தன் சாட்சிப் பத்திரத்தை அவைமுன் காட்டு ன்ெறார் சிவபெருமான்.

சிவன்-சுந்தரர் சொற்போர்

சுந்தரர் தன் தந்தையின் தந்தை தன் ஆளோலைக் கண்ட அளவிலே தன் நகைமுகம் வேறுபட்டு ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை என்று