பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சமயந்தொறும் நின்ற தையலாள்

என்று கூறுகின்றனர். உடனே இருண்மறை மிடற்றோன் தன் கையில் இருந்த ஆளோலையை அவையோர் முன் காட்ட அருள்பெறு கரணத்தான் அதை வாங்கிப் பார்க் கின்றான். பார்த்தவன் அதிலிருந்த வாசகத்தை,

அருமறை நாவலாதி சைவனா ரூரன்செய்கை பெருமுனி வெண்ணெய் நல்லூரிப் பித்தனுக் கியானு

மென்பால் வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செயதற்கோலை யிருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கிவை யென்னெழுத்து

என்று வாசிக்கின்றான். வாசகங்கேட்ட பின்னர் அவ்வோலையில் சாட்சிகளின் எழுத்தையும் நோக்கினர். பின்னர் மாசிலா மறையோர் அவர் பாட்டனார் எழுத்துத்தானா என்பதை அறியுமாறு கூறினர். உடனே சுந்தரர் கொடுத்த அவர் பாட்டனாரின் ஒலையை வாங்கி ஒப்பிட்டுப் பார்க்க, இரண்டும் ஒத்திருந்த நிலையில் சுந்தரருக்கு எதிராக மறையவருக்குக் சார்பாகத் தன் தீர்ப்பினை வழங்குகின்றனர். இதனை,

நான்மறை முனிவனார்க்கு நம்பியாரூரர் தோற்றீர் பான்மையின் ஏவல் செய்தல் கடன்

என்ற பகுதியில் தெளியலாம்.

இவ்வாறு தீர்ப்பு வழங்கிய பின்னர் மறையவர் செழுமறை முனியை நோக்கி,

அருமுனி முேன் காட்டு மாவண மதனி லெங்கள் பெருமைசேர் பதியே யாகப் பேசியது மக்கிவ்வூரில் வருமுறை மனையும் நீடுவாழ்க்கையும் காட்டும்