பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சமயந்தொறும் நின்ற தையலாள்

தொடுமணற் கேணியின் சுரங்துநீர் பாய

அன்பர் ஆகுநர் அன்றி

மன்பதை உலகில் மற்றையர் இலரே.

-நால்வர் நான்மணிமாலை

என்பது அவர்தம் திருவாக்காகும்.

ஏழாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து கிறித்தவ சமயத்தைப் பரப்ப வேண்டுமென்று தமிழகம் வந்தவர் ஜி.யு. போப் என்னும் பாதிரியார் ஆவர். கிறித்தவ சமயம் பரப்ப வந்த அந்த அருளாளரின் நெஞ்சை நன்கு பிணித்தது திருவாசகம். விரும்பி விரும்பிப் படித்தார்; உருகி உருகி நின்றார். பின் தம் மொழியில் இத்தகு சீரிய நூலை-உயர்ந்த பனுவலை-பத்தித்திறம் பேசும் பாக்களை மொழிபெயர்க்க வேண்டும் என்று எண்ணினார். திண்ணிய எண்ணமுடையார் எண்ணினால், எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் அன்றோ! திருவாசகம் ஆங்கிலத் தில் மொழிபெயர்க்கப்பட்டது. எலும்புருக்கும் பாட்டு’ (Bone melting Song) என்று கசிந்து கசிந்து உருகி உருகித் திருவாசகத்தினைக் கண்ணிர் மலர்களைச் சிந்திப் பாராட்டினார் ஜி.யு. போப் அவர்கள்.

தித்திக்கும் திருவாசகத்தின் இனிமையைப் பாமணக்க பாடினார் வடலூர் வள்ளற் பெருமான் அவர்கள்.

வான்கலந்த மாணிக்கவாசக கின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்துஎன் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

என்று வள்ளலார் வாயாரப் பாடினார்.