பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. - 7 I

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்

நள்ளேன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும்

எள்ளேன் திருவரு ளாலேயிருக்கப் பெறின் இறைவா

உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லா தெங்கள் உத்தமனே

-திருச்சதகம் : 2.

இவ்வாறு தான் வணங்கும் ஒரே தெய்வமாகச் சிவபெருமானையே தேர்ந்து, அவரடிகளையே சிந்திக்கப் பெற்றால், சிவானந்த வெள்ளம் சிந்திக்கப்பெறும் என்றும், அழுது அடி அடைதலே உயிர்கள் உய்யும் நெறி என்றும் உணர்த்துகின்றார் மாணிக்கவாசகர்.

நாட்டு மக்கள் உள்ளங்கவர்ந்த நாடோடிப் பாடல்கள் (Folk songs) வழி மாணிக்கவாசகர் தடங்கருணைப் பெருங்கடலாம் இறைவனின் அருட்பெருக்கினை வெளிப் படுத்தியுள்ளார். திருஅம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேனம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னுரசல், திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி முதலியன மாணிக்கவாசகர் காலத்து விளங்கிய சமுதாயப் பாடல்களாகும்.

இறைவனை அடைவதற்கு எளிய வழியாக மணிவாசகப் பெருந்தகையார் கொண்டது տl(Լք5/ -1CԼք5) நிற்றலாகும்.

"அடியார்களுள், யான் ஒருவனே பொய் நிறைந் தவன். என் மனமும் வஞ்சமுடையது. என் அன்பும் களங்கமற்றதன்று. ஆனால் தீவினையுடையேன் செய்த பிழையெண்ணி நைந்து உருகி அழுவேனாயின் உன்னை வந்தடையலாம். அதற்கு அ ரு ன் புரிவாயாக" என்று அகங்குழைந்து உருகுகின்றார் திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையாம் மணிவாசசர்.