பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.arp. 75

'தினைத்த னையுள்ளதோர் பூவினிற்றேன் உண்ணாதே;

நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும், அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்று தாய் கோத்தும்பி"

என்னும் பாடலில் மானிக்கவாசகரின் கருத்தும் அனுபவமும் விளக்கமுறுகின்றது.

மனித மனம் வண்டு போன்றது. மலருக்கு மலர் தாவுவதுபோல் சிந்தனையிலிருந்து சிந்தனை தாவி நிற்பது. இந்த மனத்தை அடக்கக் கற்கவில்லை யென்றால், அது மனிதனைச் சும்மாவிடாது. "மனம் அடங்கக் கற்கவேண்டும்" என்பது பெரியவர்கள் கருத்து, ஐம்புல வேடர்களால் அலைக்கழிக்கப்படக் கூடாது என்பது திருமுறைவானர்கள் கண்ட நெறி. "பொறி வாயில் ஐந்தவித்தான் பொப்தீர் ஒழுக்கநெறி நின்றார் நீடு வாழ்வர்' என்பது குறள். ஐந்தவிப்பவன் ஆண்டவன்

ஒருவனே. உலகிலே பொருட் பற்றும், மண் பற்றும், பெண் பற்றும் மனிதனுக்கு ஏற்படுகிறது. எல்லாம் சாண் வயிற்றுக்கே. இதையே தாயுமானவர் "aהrai)a(ח"Lb

யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதும் ஆக முடியும்" என்கிறார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் முருக அடியார்களுக்கு உயர்ந்த லட்சியம் இருந்தது என்பதைப் பரிபாடல் உணர்த்தும். "யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும் அறனும் மூன்றும். உருவினர்கி கடம்பின் ஒளி தாராயோ’’ என்று கூறப் பட்டுள்ள கருத்தினை அறியமுடிகிறது.

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் 7 பாடல்களில் இறைவனின் தாள்களைப்பற்றிப் பேசுகிறார். சுந்தரமூர்த்தி சுவாமிகள், மற்றுப்பற்றெனக்கின்றி