பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மேன்மைகொள் சைவ நீதி

இன்று உயிர்த்திருக்கும் சமயங்களில் சைவ சமயம் மிகப் பழமையானதாகும். சிந்துவெளியிற் கிடைத்த புதுமைகளுள் முதலிடம் பெறத்தக்கது சைவத்தின் பழமையேயாகும். அது மாக்கல் இல்லா அதனினும் முற்பட்ட காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது, இன்றளவும் வழக்கில் உள்ள மிகப் பழைய சமயமாக இது விளங்குகிறது என்று சிந்துவெளி என்கிற சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ந்த ஆராய்ச்சி அறிஞர் சர் ஜான் மார்சல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்."

"முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியதாய்' என்று மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில் சிவபெருமானைக் குறிப்பிட்டுள்ளதனைக் காணலாம். எனவே சைவத்தின் பெரும் கடவுளான சிவபெருமான் பழமைக்குப் பழமை யாகவும், புதுமைக்குப் புதுமையாகவும் பொலிந்து இலங்கு கின்றார் என்பது புலப்படும்.

'சிவம் என்ற சொல்லுக்கு நன்மை, முத்தி, செம்மை எனப் பல்வேறு பொருள்கள் கூறுவர். சிவன்' எனும் நாமம் தனக்கே உரிய செம்மேனி அம்மான்’ என்று சிவனைப்பற்றிய அடியும் ஈண்டு எண்ணத்தக்கது. எனவே, செம்மை என்பது எதுவோ அதுவே சிவம், நன்மை தருவது எதுவோ அதுவே சிவம். எல்லாரும்

1. Sir John Marshall Mohenjo-daro and the Indu

Civilization Vol. I, Preface ; p. vii.