பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ነ8 சமயந்தொறும் நின்ற தையலாள்

இன்புற்றிருக்க நினைப்பது எதுவோ அதுவே சிவம் என்பதாகும். அகநானுாற்றுப் புலவர் ஒருவர் ஒரு மாலைக் காட்சியை வருணிக்கின்றார். "கதிரவன் ஒளியால் செவ்வொளி பெற்ற வானம், கதிரவன் மறைகின்ற பொழுது அந்தி நேரத்தில் செக்கர் வானமாகக் காட்சி அளிக்கின்றது.

அவ் வந்தி நேரத்தை அடுத்து வானம் காரிருள் அடைகிறது. இந்தக் காட்சி மதுரை கண்ணத்தனார் எனும் புலவர் பெருமானுக்குச் சிவனும், மாலும் இணைந்து கிடப்பது போன்ற ஒரு காட்சியினை அவர் கண்முன் காட்டுகின்றது. அதன் விளைவாக ஒரு கவிதை பிறக்கிறது. அக் கவிதைப் பகுதி வருமாறு :

வெருவரு கடுந்திறல் இருபெருங் தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம் போல அந்தி வானமொடு கடலணி கொளாஅ

வத்த மாலை” (அகம் 360)

மேலும், கொன்றை அலங்கல் அம் தெரியலான்' 'பிறங்குநீர் சடைக் கரந்தான்", ஏற்று ஊர்தியான்", "புதுத்திங்கள் கண்ணியான்’ என்றெல்லாம் குறிப்புகள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. சிவபெருமானுக்கு உகந்த நாள் திருவாதிரையாகும். மார்கழித் திங்களில் வரும் ஆதிரை நன்னாளில் சிவபெருமானுக்குத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

சிந்து கங்கை சமவெளி நாகரிகம், ஹரப்பா, மொஹஞ்சதாரோ என்று இன்று பாகிஸ்தானிலே புது நகரங்களாக விளங்கும் இடங்களில் இன்றைக்குச் சற்றேறக்குறைய ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விளங்கியது. அங்கு வாழ்ந்த மக்கள் இலிங்க வழிபாட்