பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 8 1

சங்க காலத்தை அடுத்து தமிழில் எழுந்த முதற் காப்பியமாம் சிலப்பதிகாரம், முட்டாச் சிறப்பின் பட்டினமாம் காவிரிப்பூம்பட்டினத்தில் அக் காலத்தில் அமைந்திருந்த கோவில்களை வரிசைப்படுத்திச் சுட்டிக் காட்டுகின்றபொழுது முதலாவதாகச் சிவன் கோயிலையும் இரண்டாவதாக முருகன் கோயிலையும், மூன்றாவ தாகப் பலதேவன் கோயிலையும் நான்காவதாகத் திருமால் கோயிலையும் குறிப்பிட்டு இருப்பதனை இன்று நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

"பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்

அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும்'

சிலப்பதிகாரத்தை அ டு த் து த் தோன்றிய மணிமேகலையிலும் சிவனுக்கு உரியகோயிலையே முதலில் வைத்துக் கூறியுள்ளார் சாத்தனார். இக்காப்பியத்தில்

'நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலாப்

பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக' எனவரும் பகுதி எண்ணத்தக்கது.

கி. பி. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி. பி. 9-ஆம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் அமைந்துள்ள பல்லவர் காலத்தினை நாம் பக்தி காலம் எனலாம்.

இப்பக்தி காலத்தில் நாயன்மார்கள் தோன்றி,

'திசையனைத்தின் பெருமையெலாம்

தென்றிசையே வென்றேற மிசையுலகும் பிறவுலகும்

மேதினியே தனிவெல்ல