பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. LIII'. 83

я

தான் பொய்யாக் காவிரியினால் சோறு மணக்கும் மடங் களை உடையதாகச் சோழ நாடு விளங்கியது. சோழ நாட்டில் மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிவனு டைய திருக்கோயில்கள் நிலவின என்பது நினைக்கத்தக்க செய்தியாகும். சோழ மன்னர்களோடன்றி அவர்தம் மனைவியார், உறவினர், குறுநில மன்னர்கள், அமைச்சரி கள், சேனைத் தலைவர்கள், அரசாங்க அலுவலர்கள். ஊர் அவையினர், வணிகக் குழுவினர், அரண்மனையில் அந்தப்புரத்தில் பணிபுரிவோர், திருமஞ்சனவேளத்தார். அடுக்களைப் பெண்டிர் என அனைத்துத் தரப்பினரும் திருக்கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டனர், கொடை வழங்கினர் என்பதை அறிகின்றபொழுது, அக்கால மக்க ளிடையே ஓங்கி நின்ற சைவ சமயப் பற்றினை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும், "சோழ மன்னர்கள் சமயப் பொறை மிக்கவர்களாகத் திகழ்ந்தனர் என்றும், பிற சமயத்திற்கு எனத் திருப்பணிகள் செய்துள்ளனர்" என்றும் வின்சென்ட் ஸ்மித் எனும் வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

செம்பியன் மாதேவியர் கண்டராதித்த சோழனின் மனைவி ஆவார். கண்டராதித்த சோழன் சிறந்த சிவ பக்தன். இளம் வயதிலேயே சேரநாடு சென்று இயற்கை எய்தியவர். எனவே, இவரை மேற்கு எழுந்தருளிய கண்டராதித்தன் என்றும் வரலாற்றில் குறிப்பிடுவர், செம்பியன் மாதேவியார் தம் மகன் உத்தம சோழனைச் சிறந்த சிவ பக்தனாக்கும் திருப்பணியில் முனைந்தார்

1. The chola kings apparently without exception were

votaries of the God siva, but as a rule, were tolerant of the other sects in the normal lndian manner.” (Vincent Smith's History of India.)