பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சமயந்தொறும் நின்ற தையலாள்

பற்பல சிவாலயங்களில் அவருடைய கொடை சிறந்து மிளிர்ந்தது. பல கோயில்களை இவர் கற்றளிகளாக ஆக்கினார். நாகப்பட்டினத்திற்கு அருகில் செம்பியன் மாதேவி என்ற பெயரில் ஒர் ஊர் உண்டாக்கி ஒரு கோயி லினையும் கட்டியுள்ளார். இன்று கோனேரிராஜபுரம் என்று விளங்கும் திருநல்லத்தில் கண்டராதித்தன்' எனும் சிவன் கோயிலினை எடுப்பித்து அத் திருக்கோயிலில் தன் கணவர் கண்டராதித்த சோழன் சிவலிங்கத்தை வழிபடு வதுபோன்ற ஒரு படிமத்தை அமைத்துள்ளார். அப் படிமத்தின்கீழே கண்டராதித்தன் தேவர் தேவியார் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார் தம்முடைய திருமகனார் உத்தம சோழர் திருராச்சியம் செய்தருளா நிற்க, தம்முடையார் கண்டராதித்த தேவர் திருநாமத் தால் திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி எழுந்தருளு வித்து இத் திருக்கற்றளியிலேயே திருநல்லமுடையாரைத் திருவடி தொழுகின்றாராக எழுந்தருளுவித்த பூரீ கண்ட ராதித்த தேவர் இவர்” என்ற கல் எழுத்து காணப்பெறு கிறது. மேலும், உத்தம சோழன் மனைவியார், செம்பியன் மாதேவி கோயிலில் நாள் வழிபாட்டிற்கும் திங்கள் வழிபாட்டிற்காகவும் நிவந்தங்கள் ஏற்படுத்தினார் என்ற குறிப்பினைக் காணுகின்றபொழுது, மாமியார் மாட்டு மருமகள்செலுத்திய பேரன்பு புலப்படுத்துகின்றது. முதலாம் இராஜராஜ சோழன் திருமுக்கடலில் செம் பியன் மாதேவி பெருமண்டபம் எழுப்பினார் என்ற வரலாற்றுச் செய்தியில் இருந்து நாம் இராஜராஜ சோழன் தன் பாட்டியார் மாட்டு செலுத்திய பேரன்பினையும் பெருமதிப்பினையும் அறிய முடிகிறது. மேலும் முதலாம் இராஜராஜன் எடுத்துள்ள தஞ்சை பெருவுடையார் திருக் ாோயில் இன்றும் தஞ்சை பெரியகோயில் என்றே

அழைக்கப்படுகின்றது.