பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா 87

பினைப் பெற்றுள்ளது எனலாம். கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு, மயில் விருத்தம் முதலியனவும் அருணகிரிநாதரால் பாடப்பட்டவையாகும்.

17-ஆம் நூற்றாண்டின் இணையிலாப் புலவர் குமர குருபரர் ஆவார். இவர் இயற்றிய நூல்கள் அனைத்தும் சைவ உலகின் தலைசிறந்த நூல்கள் எனலாம். 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவப்பிரகாசர், ‘கற்பனைக் களஞ் சியம்' எனப் போற்றப் பாடுபவர். பிரபுலிங்கலீலை இவர் இயற்றியதாகும். மேலும், சோணசைவமாலை நால்வர் நான்மணிமாலை முதலியனவும் இவரால் பாடப்பட்டன. தாயுமான தயாபரரான தாயுமானவர் பாடல் 18-ஆம் நூற்றாண்டில் எழுந்த சிறந்த நூலாகும். 19-ஆம் நூற் றாண்டுக் கம்பர் எனச் சொல்லப்பட்டு விளங்கும் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களும், வடலூர் வள்ளல் பெருமானும் சென்ற நூற்றாண்டில் திகழ்ந்தார்கள். 20-ஆம் நூற்றாண்டில் சைவம் பல்வேறு நிலைகளில் வளர்ந்து உயர்வு பெற்று வருகின்றது சைவ சமய வளர்ச்சிக்குத் தமிழகத்தில் விளங்கும் சைவமடங்கள், ஆதினங்கள் ஆற்றிவரும் பணிகள் அளவற்றவை: சைவசித்தாந்தப் பெருமன்றம் சித்தாந்த நெறியைப் பரப்பும் பாங்கில் மாநாடுகள், வகுப்புகள் நடத்தி வருவதுடன், சித்தாந்தம் என்ற இதழினைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு வருதல் பாராட்டத் தக்கது. தமிழ் மக்கள் மொழி யுணர்ச்சியுடன் சமய உணர்ச்சியும் பெற்றுச் சமய உண்மைகளை உணர்ந்து அவற்றின்வழி நடப்பதன் வாயிலாக நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தொண் டாற்ற முடியும். வளர்க தமிழ் வாழ்க சைவநெறி!

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"