பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 7

'முருகன் சீற்றத் துருகெழு குருசில்'

-புறம் : 1.6 : 1.2 என்று கூறப்பெற்றுள்ளார். முருகனது வெகுட்சி போலும் வெகுட்சியினையுடைய உட்குப் பொருந்திய தலைவ: என்று சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, புலவர் பாண்டரங்கனாராற் பாராட்டப் பெற்றுள்ளான்.

இவ்விரு தொடர்களையுங் கொண்டு நாம் ஆராயும் பொழுது, முருகன் போரில் அஞ்சாத திறன் உடையவன் என்பதும், தான் கருதிய வண்ணமே செயல்களை முடித்துச் சிறப்பவன் என்பதும் தெளிவாகின்றது. எனவேதான் முருகப் பெருமானுடைய தாளினையும் தோளினையும் சிந்தித்தால் தொல்லை கொடுக்கும் நம் தொல்லை வினைகள் மறைந்துபோம் என்று குறிப்பிடுகின்றது திருவிஞ்சைப் புராணம் :

அந்திப்போது அழகுறவே நடித்தருளும்

விழித்துணைவர் அருளும் கோவை வந்திப்போர் நினைத்தபடி மயிலேறி

அயிலெடுத்து வரும்செவ் வேளைச் சிந்திப்போம் புகழ்ந்திடுவோம் மலரணிவேலர்

அவர்கமலத் தாளும் தோளும் சிந்திப்போம் ஆதலினால் நமதுபழ

வினைகளெல்லாம் சிந்திப் போமே.

அதுமட்டுமன்று; பிரமன் எழுதிய எழுத்து: அதை மாற்ற முடியாது என்று அறியாமையால் அநேக மக்கள் கூறித் தங்கள் தலைவிதியை நொந்து கொன் டிருப்பர். அத் தலைவிதியையும் மா ற் று ம் திறன் முருக னுக்கு உண்டு என் பதனை அருணகிரிநாதர் அழகுறப் பின்வரும் பாடலில் புலப்படுத்துகின்றார்.