பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மக்களை நோக்கிய கொள்கையே சைவ சித்தாந்தம்

தலைவனை நோக்கித் தொண்டன் செல்லுவது போல இறைவனை நோக்கி அனைத்துயிர்களும் செல்ல வேண்டும் என்பதே சமய நீதி. ஆனால் தொண்டனை நோக்கித் தலைவன் செல்வதுபோல உயிர்களை நோக்தி இறைவன் செல்லுவது போல-செல்லுவதாக அமைந்த தத்துவக்கொள்கையே சைவ சித்தாந்தம்.

தன்னிடம் அடிமை பேணிநின்ற சுந்தரரை தன்னுடன் சேர்த்துக்கொண்டு, தானும் சுந்தரருமாகச் சேர்ந்துகொண்டு வந்து, அடியவர்களுக்கு அடியவராகத் தன்னை அமைத்துக்கொண்ட நெறியே சைவசித்தாந்தம்.

பெருமையால் தம்மை ஒப்பார்

பேணலால் நம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார்

ஊனம் மேல் ஒன்றும் இல்லார் இருமையும் கடந்து நின்றார்

இவரை நீ அடைவாய்'

என்று அடியவர் பெருமையை இறைவனே பாராட்டிக் கூறி, இவர்களையே அடைக்கலமாக அடையவேண்டும் என்று, சுந்தரரை அடியவர்களுக்கு அடிமையாக ஆக்கிய தோடன்றி, நாமும் அவர்களுக்கு அடிமை என நின்ற திறத்தைப்பாடும் கருத்தை முடிந்த முடிபாகக் கொண்ட