பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சமபந்தொறும் நின்ற தையலாள்

காட்டி கூறுவது போலவும் உணர்ந்து சரபோஜி மன்னர் கனவு கலைந்து உறக்கத்திலிருந்து எழுந்தார்.

எனவே அபிராமி பட்டர் சிறந்த ஞானி என்பதைத் தேர்ந்து தெளிந்தார் மன்னர் சரபோஜி, பட்டரின் வீடு நோக்கி அவர் கால்கள் தாமே சென்றன. அபிராமி பட்டரை வழிபட்டு அவர்தம் பெருமை யறியாமல் அசட்டை செய்து விட்ட தம் பிழையைப் பொறுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்பொழுது தான் அமிராமிபட்டருக்கு அம்பிகையின் திருவருளே அது என்ற எண்ணம் எழுந்தது, "எல்லாம் அவள் திருவிளை யாடல்: திருவருள்” என்று அமைதியாக அடக்கமாக இருந்தார். அபிராமி பட்டரின் அளப்பரிய அம்பிகை அருளை நினைத்த தஞ்சைச் சரபோஜி மன்னர் அவருக்கு விளைநிலங்களை முற்றுாட்டாக அளிக்க முன்வந்தார். அபிராமிபட்டர் அவற்றை ஏற்க இசைந்தாரில்லை. அவர் தம் சந்ததியாரின் நன்மையைப் பொருட்படுத்தியாவது அவற்றை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று மன்னர் வற்புறுத்தவே, பட்டர் மனமின்றி ஒருவாறு ஏற்றுக் கொண்டார். அமிராமிபட்டர் பரம்பரையினர் இன்றும் அச்சலுகை பெற்றுவருகின்றனர்.

இனி, அபிராமி அந்தாதியின் உட்சென்று காணலாம்.

அபிராமிபட்டர் அபிராமியம்மையை எப்போதும் வந்தித்து வணங்குகின்றார். அவ்வம்மையோ வேதத்திற் பொருந்தும் அரிய பொருளாய், சிவ பெருமானது திருவருள் வடிவாய் உள்ளாள். எனவே நின்றபடியும் இருந்தபடியும் படுத்தபடியும் நடந்தபடியும் அம்மையையே தியானம் செய்வதாய்க் கூறுகிறார். என்றைக்கும் அம்பிகையின் திருவடித் தாமரையினையே வந்தித்து வணங்குவதாகச் செம்மாந்து கூறுகிறார். சிறந்த