பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ tury. +. 95

அம்பிகை அடியவரான அபிராமிபட்டர். பாட்டைப் படித்துப் பார்ப்போம்:

நின்றும் இருந்தும் கிடந்தும்

நடந்தும் நினைப்பது உன்னை என்றும் வணங்குவது உன்மலர்த் தாள் எழு தாமறையின் ஒன்றும் அரும்பொருளேஅருளே

உமையேஇமயத் தன்றும் பிறந்தவளே அழி

யாமுத்தி ஆனந்தமே.

-அபிராமி அந்தாதி: பாட்டு: 10

உலகம் பதினான்கையும் தன் திருவருளால் ஈன்ற தயாபரி அபிராமி என்றும், அவ்வாறு அவனியை அருளால் ஈன்றது போலவே அவ்வருள் உணர்வோடு அவ்வுலகத்தைப் பாதுகாப்பவளும் அவளே ஆவாள் என்றும், பின்னர் இறுதி யில் ஊழிக் காலத்தில் உலகை அழிக்கும் திறம் வாய்ந்தவள் என்றும், விடமுண்ட நீலகண்டனுக்கு முன் பிறந்தவள் என்றும், என்றும் வயது மூப்படையாத திருமாலின் தங்கை என்றும், பெரிய தவ நாயகி என்றும், அவளை வழிபடுவது அன்றி வேறு எத் தெய்வத்தை வழிபடல் ஒல்லும் என உரைக்கிறார் அபிராமிபட்டர்,

பூத்தவ ளேபுவ னம்பதி

னான்கையும் பூத்தவண்ணம்

காத்தவளேயின் கரந்தவ

ளேகறைக் கண்டனுக்கு

மூத்தவ ளேஎன்றும் மூவா

முகுந்தற் கிளையவளே