பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சமயந்தொறும் நின்ற தையலாள்

மாத்தவ ளேஉன்னை அன்றிமற்

றோர்தெய்வம் வந்திப்பதே.

-அபிராமி அந்தாதி: பாட்டு: 13

அபிராமி அம்மை. தன் திருவடிகளை வந்து சரணடையும் அடியவர்களுக்குச் சொர்க்கலோக பதவியை அன்போடு தருவாள் என்கிறார் பட்டர்.

வந்தே சரணம் புகும்.அடி

யாருக்கு வானுலகம் தந்தே பரிவொடு..........

-அபிராமி அந்தாதி: பாட்டு: 34

தான் வெறுப்பன செய்தாலும் பொறுமையால் அடிய வர்களை ஆட்கொள்ளுங் அருட்டிறம் உடையவள் அம்மை என்கிறார் அபிராமிபட்டர்.

வெறுக்கும் தகைமைகள் செய்யினும்

தம்அடி யாரைமிக்கோர் பொறுக்கும் தகைமை.........

-அபிராமி அந்தாதி: பாட்டு: 46

மேகத்தைப் போன்ற, பூவையணிந்த குழற் பாரத்தை யுடைய அபிராமியின் கடைக்கண்கள், அத் தேவியின் அடியவர்களுக்கு எல்லாவகைச் செல்வங்களையும் தரும்; கல்வியைத் தரும்; ஒரு நாளைக்கேனும் தளர்ச்சியை அறியாத உறுதியான மனத்தை அளிக்கும்; தெய்வீக அழகை வழங்கும்; மனத்தில் வஞ்சங்கொள்ளாத உறவின ரையும் நண்பரையும் நல்கும்; இன்னும் உலகில் எவை எவை நல்ல பொருள்களோ அவை எல்லாவற்றையும் இனிதே தரும். இவ்வாறு புகழ்கிறார் அபிராமிபட்டர்.