பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108


காலடி மெளடிகம் செய்து கொண்டிருக்தது.

அதைப் பற்றிய கவலையோ, அக்கறையோ வீரபாகுவுக்கு இலகலதான்! அவர் மீண்டும் அதிவீரராம பாண்டியனை ஆழ்ந்து நோக்கினுர், அதே பார்வையால் குமாரி பரிமளத்தையும் அளந்தார். அவருடைய மனக் கிழியில், பரிமளமும், பாண்டியனும் மாலையும் கழுத்து மர்க, புன்னகையும் புது கிலவுமாக ஒளிர்ந்தனர்.

ஒரு சம்பவத்தை எண்ணமிடலானுர் வீரபாகு. அவர் மங்களத்தையும் பங்களுர்ப் பங்கஜத்தையும் மாறிமாறிப் பார்த்தபடி இட ம பெயர்ந்து அமர்ந்தார். எண்ணத் தொடங்கியதும், சம்பவம் சட்டை உரித்த கல்லபாம்பாகப் பளிச்சிடத் தொடங்கியது.

“ஐயா!’ என்று அன்பு இகாழிக்க அழைத்துக் கொண்டே வந்தாள் பரிமளம் பெயரில் மணம் பரப்பிய பரிமளம், அவளுடைய புரிசுத்தமான அந்தத் தெய்வீக அழகிலும் சுகந்தம் தாவி விளையாடியது.

பரிமளத்தைக் கண்டதும் வீரபாகுவுக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. சிறு பிள்ளையின் துய அன்புடன், ‘என்னம்மா?’ என்று கெஞ்சுதலோடு விசாரித்தார்

‘உங்ககிட்டே ஒரு விஷயத்தைத் தெரியப்படுத் திறதுக்கு இப்போதுதான் எனக்குத் தைரியம் வக்திச் சுங்க, ஐயா!’ என்றாள் கன்னிப் பெண்.

‘கான் உன்னுேட தந்தையாட்டம், என் கையிலே சொல்றதுக்கு இவ்வளவு தூரம் யோசிக்கவா வேனும்: தைரியமாய்ச் சொல்லம்மா, பரிமளம்’ என்று பரிவுடன் சொன்னுர் வீரபாகு

பரிமளத்தைச் சக்திக்கக் கிட்டிய அந்த வாய்ப்பை விதியின் வாழ்த்தாகவே கருதியிருந்தார் வீர பாகு, இல்லையென்றால் பிள்ளைப்பேறு அற்றிருந்த அவருக்குத் தேடிவந்த தெய்வமாக பரிமளம் கிடைத்திருப்பாளா? வாரத்துக்கு ஒரு தடவையாவது பரிமளம் இந்தப் பங்களாவுக்கு வந்து செல்வாள். வரும்போது அன்புை பும், பாசத்தையும் கொண்டு வருவாள். மகாலட்சுமி