பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117


பரிமளம் காது வளையங்கள் கனிந்தாட, மார்பகத் தில் அழுக்தப் பதிந்திருந்த டாலர்ப் பதக்கம் கண் சிமிட்டி அழகே கனவாகவும், கனவே அவளாகவும் அழகின் போதையாகி; போதையின் பாதமாகி, அந்த சிறுகதை மன்னனின் முன்னே தரிசனம் கொடுத்த வண்ணம் கின்று கொண்டேயிருந்தாள்.

இப்போதுதான் பாண்டியன் அவளை ஓரக் கண் பதித்துப் பார்த்தான்.

அரைக் கணம் கிலே மயங்கினன் அவன். அவள் பெண் ணு?

மோகினியா?

தெய்வமா? இல்லையென்றால்...... மீண்டும் ஒரு தரம் பரிமளத்தைப் பார்க்க வீரபாகு வுக்கு உரம் இல்லை. மறுபடியும் அவர் அவளைப் பார்த் தால், அவரது அன்பு கெஞ்சம் சுக்கல் சுக்கலாக வெடித்துச் சிதறிவிடும்!

எழுந்து வந்தாள் பெங்களுர் சீமாட்டி பங்கஜம், எதுவும் வீரபாகுவுக்குத் தெரியாது. அதற்குரிய ஏதுவும் இல்லை

வீரபாகு ஒரு கணமாக திட்டத்தோடு சிந்தனைச் சிற்பி பாண்டியனை ஊடுருவிப் பார்த்தார். பாயப் பதுங்கும் புலியைவிட ஒரு படி மேலே அவன் கிற்ப தாகவே அவர் கணிக்கலானுர்,

“மிஸ்டர் பாண்டியன்’ என்று ஓங்கிய குரல் எடுத்துக் கூப்பிட்டார் வீரபாகு.

அந்தக் குரலின் கனம் பாண்டியனை மட்டும் திசை திருப்பவில்லை; பரிமளத்தையும் பங்கஜத்தையும் மங்களத்தையும் கூட திசை திருப்ப வைத்துவிட்டது

.-8 ‘ ‘ . . .