பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. காதலாகி, கசிந்து

கண்ணிர் மல்கி...!

முத்தக் கதிர் பட்டுக் கண்மலர் விரிக்கும் அல்லவா சூரியகாந்தி அப்படித்தான் குமாரி பரிமளமும் விழிப்பூக்களை மூடி மூடித் திறந்தாள்; எழில் கொழித்த மார்பகத்திலே பொழில் மனமாகப் பதிந்து கிடந்த தங்கப் பதக்கம் அழகு காட்டித் திகழ்ந்தது. தன்னைத் தானே ஒரு முறை குனிந்து பார்த்துக் கொண்டாள். சதை திரட்சிகளின் கவர்ச்சி அவளை எங்கோ அழைத்துச் சென்றிருக்க வேண்டும். கண் வட்டத்தில் மோகம் கிறங்கியது. சிறுகதை மன்னன் அதிவீரராம பாண்டியன் தோன்றினன். உள்மனம் புன்னகை செய்தது. தலைகிமிர்ந்து கின்றாள் பரிமளம். வலது கையில் பற்றி நின்ற அந்தச் சிவப்பு டைரியை மீண்டும் பார்த்தாள் அவள். இப்போது வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கிளுள்.-'ஆஹா! என் கனவு பலித்து விட்டது! ஆசை நினைவுகள் பூச்சரம் தொடுத்தன.

சிறுகதை மன்னன் என ஏற்றிப் போற்றப்பட்ட அதிவீரராமபாண்டியனின் புதுமை மிக்க எழுத்துக் களிலே மனம் மயங்கி அவள், அவனுடைய அறிமுகத் துக்காகத் தவம் கிடந்த அந்த நாட்களே எண்ணினுள். தெய்வ சங்கற்பம் போன்று நிகழ்ந்த அந்தச் சக்திப்பை-அதாவது , பாண்டியனைச் சக் தி க் க வாய்த்த அந்த கிகழ்ச்சியை மீண்டும் ஒரு தடவை பெருமையோடும் ப்ெருமிதத்தோடும் நினைவு கூர்ந் தாள். நெஞ்சின் அடிவாரத்தில் இன்பக் கிளுகிளுப்பு ஊர்ந்தது, மெய்ம்மறந்தாள். புகழ்பெற்ற எழுத் தாள8னச் சந்தித்துப் பழகிய காட்சிகள் அடுக்கடுக்காக கிழலாடத் தொடங்கின. சிந்தனையைத் துண்டிவிட்ட அவனுடைய சிந்தனைப் பூக்கள் என்றென்றும் அவள் இதயத்தில் மணம் பரப்பிக் கொண்டே இருக்கும்