பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. மோகினியா? தெய்வமா?

. பெண்ணேதான?...

இளநீலப் பாதரசக் குழல் ஒளி கவர்ச்சியுடன் சிந்திச் சிதறிப் பரவிக் கொண்டிருந்தது.

நான்கு சுவர்களுக்கு மத்தியில் பரிமளத்தின் உலகம் சுழலத் தொடங்கியது.

அடைபட்ட கதவுகள். அடைபடாத நெஞ்சம். தடைபட்ட சிக்தனைகள். தடைபடாத கனவுகள்.

காதலின் தவிப்பு, அன்பின் துடிப்பு, பாசத்தின் பற்று, ஏக்கத்தின் ஆற்றாமை, ஆசையின் கனவு, கனவின் உருக்கம்-இப்படிப் பல திறப்பட்ட மன உணர்வுகளை அணைத்தும்-அனேந்தும் உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்ட குமாரி பரிமளத்தின் முன்னே அந்த டைரி தள்னுடைய இதயத்தை திறந்து காட்டிக் கொண்டிருந்தது. - --

ஒடிய ஏடுகளை ஒட்டினள். ஒடிய காலம் ஓடியது.

சிறுகதை மன்னன் அதிவீரராம பாண்டியன் பேசத் தொடங்குகின்றான், z

. இளங்காலப் பொழுது தியாகராய நகரில் பாண்டி பஜார் பதிப்பகத்தில் தங்கியிருந்த கும்பகோணத்துக் கதாசிரியர் வி. ராமைேடு இலக்கிய சர்ச்சையில் இரவுப் பொழுதைக் கழித்து விட்டு, புரசைவாக்கத்தில் இறங்கி

கடந்து கொண்டிருக்கிறேன்.