பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133


படுக்கையில் போராடிய அன்னையின் அன்பு முகம் கிழலாடியது. கண்கள் பனித்தது. அம்மா! என்று விம்மிள்ை. ஜிவமரணப் போாட்டம் நடத்திய அந்தத் தெய்வம் தன்னிடம் பொறுப்பு ஒன்றை ஒப்படைத்து விட்டு கண்களை மூடிய நிகழ்ச்சி அவளது கண்களை மூடவிடாமல் நச்சரித்துக் கொண்டிருக்கும் விக்தையையும் அவளால் மறக்க முடியாது. தாயை அறிந்தாள். தாய் முலைப்பாலின் சுவையை அறிந்தாள். ஆல்ை தந்தையை அவள் அறிய மாட்டாள். தங்தைப் பாசம் அவளுக்குத் தெரியாது!

என்னுடைய ரத்தத்துக்கு ரத்தம் ஈந்த அந்தப் புண்ணியவான் என் தாயை வஞ்சித்து, அவள் கற்பைச் சூறையாடி, அவளுள் என் ஜனனத்தை அம்பலப்படுத்திவிட்டு, கான் இந்தப் பயங்கர உலகத் திலே அவதரித்த அன்றைக்கே-என்னைப் பச்சை மண்ணுகப் பார்த்த கையோடு, என் தெய்வத்தை கை விட்டு ஓடி, பாவியாகி விட்டார்! அவரைப் பழி வாங்க வேண்டும். அம்மாவிடம் சூள் உரைத்திருக்கிறேன்!... தெய்வமே! அ ம் ம !... கண்களைத் துடிை த்துக் கொண்டாள் பரிமளம். .

‘அப்பா-ஆமாம் என் தந்தை-அந்தப் பாவி என் னுடைய திருஷ்டி மச்சத்தைப் பார்த்துப் பூரித்துப் போய் விட்டாராம். கமலம்: கம்ப பாப்பா தெய்வ அம்சம் கொண்டு பிறந்திருக்காக்கும்! இந்தத் திருஷ்டி மச்சம் பாப்பாவுக்கு பிரமாதமான எதிர்காலத்தைக் கட்டாயம் கொடுக்கும், ஏன் பேச்சை நம்பு’ என்றாராம். பின் ஏன் அந்தப் பாவி மனம் மாறினர்; அப்பாவின் படத்தைத் தருவதற்கும் அவர் பெயரைத் தெரிவிப் பதற்கும் சக்தர்ப்பம் வரும் வரும் என்று சொல்லி, அந்தச் சந்தர்ப்பம் வருவதற்கு வாய்ப்புக் கொடுக்கா மலே அம்மாவின் ஜீவன் பிரிந்து விட்டதே...??

இமைப் பொழுது வரை, பரிமளம் இமைக்க மறக் தாள். உயிர் இயங்க மறந்தது. உணர்வு கடனுற்ற மறந்தது. ஆனல் அவள் மட்டும் தன் கதையை மறக்கவே இல்லை; மறக்கவும் மாட்டாள்; மறக்கவும்

சை.-9 -