பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135


பாதங்கள் மரத்துப் போயின. சோபாவில் இருந் தவள் மெதுவாக எழுந்தாள். நிற்க முடியவில்லை. தம்ளரில் எஞ்சியிருந்த தண்ணிரைப் பாதங்களில் தெளித்தாள். இப்போது தேவலாம். உணர்வுகள் இருக்கினறன. புடவைத் த லே ப் ைப எடுத்துக் கொய்து போட்டுக் கொண்டாள். சுருட்டைத் தலை முடியின் கொண்டைக்கு எழில் பூட்டிய-மங்கள செளபாக்கியம் ஊட்டிய பூச்சரமும், பின்னழகுக்கு எடுப்புத் தந்த பிரேலியரின் கவர்ச்சியும் முதுகுப்புறக் கண்ணுடியில் தெரிந்தன. பாதங்களைத் தொட்டு கினற உள் பாவாடை இப்போது சீரடைந்தது. பொட்டுப் பொழுதுக்குள் அவள் தவித்துப் போனுள்.

அந்தச் சம்பவம்...?

தொழிலதிபர் வீரபாகுவின் அன்பையும், பாசத்தை யும் அைைதக் கன்னியான தனக்கு அறிமுகம் செய் வித்த அந்தச் சந்தர்ப்பத்தை அவள் உயிருள்ள மட்டும் நன்றியறிவுடன் வணங்கக் கடமைப்பட்டிருக் கிருள். மறக்க மாட்டாள்!-மறுக்கவும் மாட்டாள்! உயிர்ப் பிரச்னை அது. ஊஹஇம்; மானப் பிரச்ஆன ஒன்றின் மூலம், ஓர் உன்னத அன்பைப் பழக்கப் படுத்திக் கொண்ட அதிர்ஷ்டம் அவளுக்கு கை கூடி வந்தது. அப்படித்தான் செல்வக் குமாரி சீதா சொல் வாள். மெத்தச் சரி!

தாய்ப்பால் கேட்டுச் சிணுங்கும் பாப்பா மாதிரி அவள் உள்மனம் சிணுங்கியது. ஆசாபாசங்களுக்கு ஈடு கொடுக்க முடியாத ஒரு தவிப்புடன் உழன்ற் பரிமளத்தின் கபாலம் கொதித்தது. தன் கிலேயின் உணர்வு மீண்டது. வீரபாகு த ன க் கென் று அமைத்துக் கொடுத்திருந்த இந்த அறையின் சூழலே தன்னுடைய எதிர்காலத்துக்கு வாய்த்திட்ட வளப்ப மான அடையாளமாகவும் அழகு காட்டியது.

தொழிலதிபர் வீரபாகுவைப் பற்றிய சிந்தனைகளில்

பரிமளம் ஊர்ந்தாள். நல்லதும் கெட்டதுமான குனக் கணிப்புக்கள் வந்து போயின. தன்னை பெங்களுர்