பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137


முதற் சந்திப்பு! முதற் காதல்! அப்புறம்...?... முதல் இரவு! நாணித் தலை குனிந்தாள்.

கவர்ச்சிக் கன்னி இதழ்களில் கள்ளம் கிறைந்த புன்னகை விளையாடியது.

மோகினிச் சிலைதான் பரிமளமாக உரு மாறி விட்டதோ?

இல்லை புராண கால மோகினியேதான் இப்படி பரிமளமாக நாகரீக அவதாரம் எடுத்து, கடாவ் புல்” வாயல் புடவையும், ஹகோபா சோளியும், காயுடு ஹால் பிரேலியரும் திகழ இந்தத் தமிழ் மண்ணுக்கு

வந்திருப்பாளோ?

இன்பத் தவிப்புடன் காட் குறிப்பில் ஒன்றினுள், அவள்!

“மண்ணுசை, பெண்ணுசை பொன்னுசை ஆகிய மூன்று ஆசைகளைத் துறக்க வேண்டு மென்று யாரோ சொல்லி விட்டுச் சென்றதாக நமது அருமைத் திருநாட்டில் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். ஆணுல் இந்த ஆசைகளில் ஒன்றையாவது இன்றுவரை உலக ரீதியில் யாராவது துறந்தார்கள் என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நல்ல வேளை இந்த ஆசைப் பட்டியலில் புகழாசையை யாருமே சேர்த்துக் கொள்ளக் காணுேம்!”

விடிய விடிய விழித்திருந்து சிங்கிள் சாயாவையும் நாலு பாஸிங் ஷோ சிகரட்டையும் துணைக்கு வைத்துக் கொண்டு, கதைகள் எழுதிவிட்டு, அவைகளின் ஐந்து ரூபாய் அன்பளிப்புக்காக சென்னை ரோடுகளில் ஆயிரம் தரம் அலைந்த தொல்லைகள் இனி ஒழிந்து விட்ட மாதிரி தான்! -