பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

கனவுகளின் முற்றுப் பெருத ஒரு சோகத்தின் ஏக்கத்தை யொத்து, வறட்சி மிக்க சிரிப்பைச் சிந்தினர் புண்ணியகோடி. - -

பெரியவரின் முகவிலாசத்தில் விளைந்திட்ட சுருக் கங்களின் கூடுதலைக் கவனிக்கத் தவறவில்லை ஊர்வசி. ‘சாமிக்கு வேனுமா இது ரொம்பக் காலமாய்த் தேடிக் கிணு இருக்தேன். எதுக்கும் வேலை வரவேணுமா? இப்பத்தான் கிடைச்சுது” என்று விளக்கம் ஈக்தாள்.

பெரியவர் தலையில் அடித்துக் கொண்டார். சிவ: சிவா! கர்மம். கர்மம்! சரி, சரி, நீ புறப்படு தாயே!” என்று தடித்த குரலில் வசனம் பேசிவிட்டு, அங்கு இருந்து எழுந்து மடப்பள்ளியைத் தஞ்ச டைக்த கேரத்தில் ஒரு விஷயம் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள மறந்து விட் ட விவரத்தை உண லாஞர். “ஊர்வசிக்கு எப்போ இந்த பேபி பிறந்தது...?’முளைத்த இக்கேள்வியை மண்டை யில் அடித்தார்.

‘சாமி உடம்பு ரொம்ப இ8ளச்சுப் போயிட்டுதே! கவனமாய்ப் பார்த்துக்கங்க” என்று ஆறுதல் தோய்ந்த எச்சரிக்கையை நழுவ விட்டுச் சென்ற ஊர்வசியின் சொற்கள் அவரது இதயத்தின் இ த ய த் தி ல் எதிரொலிக்கத் தொடங்கின.

 &   

மடப் பள்ளியினின்றும் வாயைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்தார்கள் தந்தையும் தனயனும்,

திருக்கல்யாண மண்டபத்தின் மேலச் சுவரில் ஆடிக் கொண்டிருந்த ஆடியில்-கண்ணுடியில், கீழ்ப் பகுதியில் இருந்த சுவர்க்கடிகாரம் முகம் பார்த்துக் கொண்டிருந்தது. -

பொய்மை வாழ்விலே மெய்மையை உணரத் துடிக் கின்ற ஒர் உண்மை மனிதனுக்கு கேராக, கடிகாரம் பத்து முறை, முறை வைத்து அடித்தது; ஒய்க்தது.