பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138


தமிழ்காட்டில் பிறப்பதே தரித்திரம். அதிலும் எழுத்தாளனுகப் பிறப்பதென்பது ஆமாம் என் மாதிரி-எழுத்தாளகை ஆகவேண்டுமென்ற இலக்கிய வெறியுடன் தன்னைத்தானே கெடுத்துக்கொண்டு. எழுத்தாளகை மாறுவதென்பதும்- எழுத்தாளனுகப் பிழைப்பதென்பதும் தரித்திரம், பயங்கரம்! எழுத் துக்களைப் போற்றத் தெரிந்த அளவுக்கு அந்த எழுத் துக்களை ஆளுகின்ற எழுத்தாளனைப் போற்றத் தெரிய வேண்டாமா, இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கு?... கேவலம்!...

என்னவே, கன்னித் தமிழ் ஏட்டின் அறிமுகம் கிடைத்தது. கதை கொடுத்தேன். அக்கினிப் பரீட்சை’ என்ற கதை அது. பிரச்னைக் கதை அது. புதுமைப் பித்தன் பொன்ன்கரம்’ என்ற கதையில் கற்பு என்பது சுத்தப் புரட்டு என்று சாதித்த கதையை எழுதி புரட்சியை உண்டாக்கினர் அல்லவா?-அதாவது கட்டிய கணவனுக்குக் கஞ்சி கொடுப்பதற்காக, வேறு வழியில்லாமல் வக்கும் இல்லாமல் இருந்த ஒரு பெண்அசல் தமிழ்ச்சாதிப் பெண் தன் கற்பை விற்கிருள்!அமரர் புதுமைப்பித்தன் மாதிரி ஒரு புரட்சி செய்ய விரும்பினேன்.

கடக்கும் தடத்தை விட்டு புதிய தடத்தில் நம் ரசிகர்களை இட்டுச் செல்லத் திட்டம் வகுத்தேன். கற்புக்குக் கண்ணகியைத் துணைக்கு அழைத்துக் கொள்ளும் பண்பு கொண்ட நமது அருமைத் தமிழ் காட்டிலே, காதலுக்குப் பிறகுதான் கற்பு என்று ஒரு புதிய-அப்டு-டேட் சித்தாந்தத்தை புகுத்தித்தான் ‘அக்கினிப் பரீட்சையை எழுதின்ேன். நான் எதிர் பாராத வகையிலே, அந்தப் பத்திரிகைக்காரன் ரூபாய் நூறு சன்மானம் கொடுத்தான். நான் எதிர்பார்த்த மாதிரி வாலிபர் படை என் கதையை வெகுவாக ரசித்தது. ஒரு படக் கம்பெனிகூட என்னிடம் ‘அட்வான்ஸ் கொடுத்துக் கதை கேட்டிருக்கிறது!