பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139


ஆளுல், ஒரு பெண் மட்டும் அந்தக் கதையை கன்னபின்னுவென்று தாக்கிக் கடிதம் எழுதி விட்டாள். வேடிக்கையான சக்திப்பு, வேடிக்கையான சம்பவம்.

மண்ணடியிலிருந்த என் அறையிலிருந்து கீழ்ப் பாக்கத்துக்கு பஸ் ஏறினேன். புரசைவாக்கம் குளத்தில் ஒரே கூட்டம். ஆபீஸ் முடிந்த நேரம். கண்டக்டர் டிக்கட் கேட்டான். கைப்பிடி வரை பற்றியிருந்த கான் மூர்மார்க்கெட் புத்தகச் சுமையோடு மல்லாடி, சட்டைப் பையில் ஒளிந்து கொண்டிருந்த சில்லறைகளைத் தேடினேன். தோல் பையைத் திறக்க முடியவில்லை. அதன் மேற் பகுதியிலருந்த என்னுடைய பெயர்ச் சிட்டு சிரித்தது. என்ல்ை சிரிக்க முடியவில்லை. சில்லறைகளை ஒருவழியாகப் பொறுக்கிவிட்டேன். அதற்குள், “சார், உங்களுக்கும் சேர்த்து அக்தப் பெண் டிக்கட் வாங்கிவிட்டது” என்றான் கண்டக்டர்.

திரும்பினேன்


அந்தத் தெய்வப் பெண்!

ஒரு நாள் இளங்காலைப் பொழுதிலே அம்மன் சக்கிதியிலே தன்னையும் தெய்வத்தையும் பிரித்து உணர்த்த முடியாதபடி என்னைத் தவிக்கச் செய்து விட்டு மறைந்தாளே அதே பெண் எனக்கும் சேர்த்து டிக்கெட்டுக்கு துட்டு கொடுத்திருந்தாள்.

அழகை ரசிப்பதில்தான் எழுத்தாளன் எவ்வளவு பரபரப்புக் கொள்கிருன்!...

அந்தப் பெண்ணின் இடது புறத்து ரோஜாக் கன்னத்தில் காணப்பட்ட அந்த மச்சம் அவளே எனக்குக் காட்டிக் கொடுத்து விட்டது.

“எழுத்தாளர் ஸார், உங்களைச் சக்திக்க ஒரு வாய்ப்புக் கைகூடும்னு நான் கனவிலே கூட கினைக்கலே! உங்களோட எழுத்துக்களிலே நீங்க