பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140


கையாண்டு வருகிற புதுப்புது உத்திகளும், பாணி களும் என்னை ரொம்ப ரொம்பக் கவர்ந்து விட்டன!” என்றாள் அவள்,

நான் இருபது காசை எடுத்து அவளிடம் கீட்டினேன்.

அவள் என் செய்கைக்காக வருந்துபவளாக தவித்தாள். உதடுகள் துடித்தன. விழி மணிகள் மருண்டன. வேண்டாம் என்கி பாவனையில் கை வளையல்களும், காது வளையங்களும் குலுங்க சமிக்ஞை காட்டினள். அவள் தவிப்பை நான் ரொம்பவும் ரசித்தேன். என்னுல் கூட எழுத்துக்களில் வடிக்க முடியாத அளவுக்கு அவளே ரசித்தேன்.

அவள் மூச்சு என் மேல் படும்படி கான் கின்றேன்.

பஸ் மடங்கியது.

அவள் என்மீது சாயவில்லை!

வேடிக்கை பார்த்தார்கள் பிரயாணிகள்.

பிரபல எழுத்தாளரும் அதீதமான எழிலரசியும் சக்திப்பதென்றால் வேடிக்கை மட்டுமல்ல விநயமான கிகழ்ச்சியும் கூடத்தானே?

என்னை அவள் எப்படிக் கண்டு கொண்டாள்?

அது சரி. -

அவள் பெயர் என்ன?

கேட்டேன்! -

பரிமளம்’ என்றாள்

  அழகான-பொருத் தமான-பரிமளம் மிகுந்த பெயர்!... - மாடியில் தடதடவென்று சத்தம் கேட்டது.

டைரியை அப்படியே போட்டு விட்டு மாடிப் படிககட்டை அடைந்தாள் பரிமளம்.