பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142


ஆகும். ஜப்பான் நாட்டு ஒமேகா சுவர்க்கடிகாரத்தின் உச்சியிலிருக்கும் பூஞ்சிட்டு கூ கூ என்று குயிலாகக் குரல் கொடுக்கும். பிரிட்டிஷ் ரேடியோ கிராம் ஜாஸ்’ சங்கீதம் முழக்கம் செய்யும். தனி அறைக்குள் ஒரு தனி அறையாக விளங்கும சின்னஞ் சிறு இடத் திலேயே நவநவமான உல்கங்கள் நவநவமான மோஸ் தரில்-பான்மையில்-பாவனையில் பொலியும். அங்கு தரிசனம் தரும் விதவிதமான கோப்பைகள்-பாட்டில் கள்!...ஆஹா!...ஊம்! பெரிய இடத்துக் கதைகளைப் பற்றியெல்லாம்...மூச்!

இரண்டாம் கட்டு ஆளோடியில் மொளைக்’ வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த லினுேலியம் விரிப்பின் மீது ஒரு ரத்தினக் கம்பளத்தை விரித்து உட்கார்க்து, மங்களமும் பங்களுர்ப் பங்கஜமும் ‘கதை’ பேசிக் கொண்டிருந்தார்கள். குழந்தை குட்டிகள் இல்லாத அத்தனை பெரிய பங்களாவில் அப்போதைக்கு அவர்கள்தாம் குழந்தைகளாக மாறிவிட்டிருந்தார்கள்.

பங்களுர் வாழ்க்கையைப் பற்றி பங்கஜத்திட மிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டாள் திருமதி வீரபாகு. -

பங்கஜத்தின் ஆசைப்பிரகாரம் மங்களம், தன்னு, டைய வாழ்க்கையைப் பற்றி விவரிக்க வேண்டியவள் ஆளை. -

பெண்கள் இருவர் பேச ஆரம்பித்தால், பேச்சுக்கா பஞ்சம்: இருவரும் என்னவெல்லாமோ பேசினர்கள். ஆல்ை, ஒர் உண்மை என்னவென்றால், அவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி பொது வாக மேலெழுந்த போக்கில்தான் பேசிக் கொண்டிருக் தார்கள். -

இதற்கிடையில், மங்களத்தோடு இருமல் ஓடோடி வந்து விளையாடத் தொடங்கிவிட்டது. அவளுக்கு

வேர்த்துக் கொட்டியது. -

பங்கஜம் சமையற் கூடத்துக்கு ஓடி தண்ணிரும் கையுமாகத் திரும்பினுள். மங்களத்துக்கு இரண்டு