பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144


“அழகே உருவான கன்னிப் பெண் ஒருத்தியும், காளைய்ைப் போன்ற ஒரு வாலிபனும் நீராடிக்கிட்டு இருந்தார்களாம் அவன் மூஞ்சிலே பவளம் மாதிரி இருந்த தன்னுேட சிவந்த வாயிலிருந்த நீரை அப்படியே கொப்புளித்துத் துப்பிட்டாளாம்!”

“அடிப் பாவி’ என்று பதறினுள் மங்களம். ஆல்ை, பங்கஜமோ கடகடவென்று சிரித்து விட்டாள். என்ன அக்கா இப்பிடி வையறிங்க? பாக்கிக் கதையையும் கேட்டுட்டு அப்பாலே பேசுங் களேன்:

‘சரி, சொல்லுங்க பங்கஜம்.’ ‘அந்த இளைஞன் இதைக் கண்டு சந்தோஷப் பட்டான்’ என்றாள் பங்கஜம்.

‘அட, பைத்தியங் கொள்ளி!’ என்று எரிச்சலுடன் மீண்டும் திட்டலானுள் பங்கஜம்.

மீண்டும் சிரிப்பு வெடித்தது பங்கஜத்திடமிருந்து. மார்புச் சேலே நல்ல வேளை விலகி விடவில்லை.

‘அக்கா, இனிமேல்தான் சஸ்பென்ஸ் இருக்கு!” என்று அவளது ஆர்வத்தைத் துாண்டி விட்டாள்.

“அப்படியா? சொல்லுங்க!’ துடித்தாள் மங்களம். “அவள் தன் முகத்திலே துப்பிய அந்த எச்சில் கீரை ஆம்பல் பூவிலே இருக்கிற இனிய சுவை கொண்ட தேன் அப்படின்னு விமர்சனம் செஞ்சானும்” என்று நிறுத்தினுள் பங்கஜம்

‘அட கடவுளே!...ஊஹல்ம்!... அடரதிமனிதரே!... இது காதல் விஷயம் போலிருக்கே!” என்று கை கொட்டிச் சிரித்தாள் திருமதி வீரபாகு இருமல் வம்புக்கு வந்து விடாமல் இருக்க சிரிப்புக்கு முற்றுப் புள்ளி இட்டாள். - - -

கேட்ட காதல் விவகாரம் மங்களத்தை அவளது கடந்த உலகத்துக்கு அழைத்துச் சென்றது போலும்!