பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145


அவள் சுய உணர்வு பெற்று, பங்கஜத்தைப் பார்த்த நேரத்தில் அவளும் ஏதோ சிந்தனை ல்யிப்பில் கட்டுண் டிருந்தது தெரிய வந்தது,

காலம் ஏன்தான் இப்படி புள்ளி மானுக ஒடு. கின்றதோ?

பொய்யாகி, கனவாகிப் போன நடந்த கதைகள் ஏன்தான் திரும்பி ஓடோடி வருகின்றனவோ?

பங்கஜத்தின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து, கொள்ள மிங்களம் ஆசை கொண்டாள்.

அதற்குள், “எங்கே மிஸ்டர் வீரபாகு?’ என்று: விசாரித்தாள் பங்கஜம்.

“அ வங்க மாடிக்குப் போயிருக்காங்கண்ணு தோணுது, அவங்களுக்கு ஆயிரம் டுசா இ!’

“ஆமா, ஆமா!... இண்டஸ்ட்ரியலிஸ்ட் வீரபாகு, இன்னு மெட்ராஸிலே ரொம்பப் பிரசித்தமாக இருக்கு:

என்னவோ, எல்லாம் பகவான் கடாட்சம் பங்கஜம்!”

நே ம் ப பரிமளத்தையும் கூட காணலியே: அதோட அப்பாவோட அது இருக்குமோ?

“ஊஹஅம்’ என்று பதில் சொன்ன மங்களத் துக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. பரிமளத்தை. தங்களுடைய அருமைத் திருமகளாக-ஆன்புத் தவப் புதல்வியாக பங் க ஜ த் தி ட ம் அறிமுகப்படுத்தி வைத்ததை அவள் கம்பி மேலும் ஏதாவது கேட்டு: விடுவாள்ோ என்று பயந்தாள் மங்களம்.

மங்களம் செய்த புண்ணியம், அப்படிப் பட்ட சிக்கலில் கை வைத்துப் பாவம் தேடிக் கொள்ளவில்லை. பங்கஜம்! .

“அக்கா, நம்ப பரிமளத்தோட கல்யாணத்தை எப்போது நடத்தப் போlங்க?’ என்று மட்டும். ஆதுரம் பொங்கக் கேட்டாள் அவள்.