பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i47

“ஆல்ரைட்!...” என்று பேச்சை சடக்கென்று கிறுத்தினுள், தொடர்ந்து எ ைத .ே யா தெரிவிக்க வேண்டுமென்று மின் வெட்டும் நேரம் தவித்தாள். பிறகு, எதையுமே சொல்லாமல் மெளனம் காததாள் பங்கஜம்.

அப்போது ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து போன் கால் வந்தது. புண்ணியகோடிக் குருக்கள் உடனே வீரபாகுவைப் பார்க்க வேண்டுமாம்!--இதுதான் செய்தி ஆகட்டும் சொல்கிறேன்’ என்று பதிலிறுத்து விட்டு நகர்ந்தாள் மங்களம். அடுத்த குரல் தேவ மைேஹரியுடையதாக இருந்தது. பரிமளத்தைக் கூப்பிட்டாள். பரிமளத்தைக் கூப்பிட்ட மங்களம் வாயெடுக்க முனைக்திட்ட வேளையில் தான் மாடிப்படி களில் தடதட வெனறு பயங்கரச் சத்தம் ஒன்று கேட்டது. தொலைபேசிக் கருவியை அப்படியே மேஜை மீது போட்டுவிட்டு பொட்டில் அடிபட்ட பதைப்புடன் மாடிப்படிக்கட்டை கோக்கி ஓடினுள் மங்களம்.

உடன் தொடர்ந்தாள் பங்களுர் பங்கஜம்:

& t {

பங்கஜம் கான் விளக்கைப் போட்டாள் .

ஜமித

“ஐயோ அத்தான்!” என்று முதலில் அலறினுள் மங்களம், கெற்றித் திலகமும் அலறியது. .

மாடிப்படிக்கட்டின் காலடியில் கிடந்தார் வீரபாகு. அவர் காலடியில் கிடந்தாள் பரிமளம். ‘அம்மா பரிமளம்’ என்று ஓலமிட்டாள் மங்களம், ஜீவநதியாக பொங்கிப் புரண்ட பாசம் ஓலமிட்டது.

கண்ணிர் விளைந்தது வினையைப் போல! வரவேற்புக் கூடத்தில் யாரோ வரும் காலடி யோசை நுட்பமான ஒலிப்பதிவுடன் கேட்டது.

வரவேற்பறையின் கிலைப்படியில் பெண் ஒருத்தி யின் இரட்டைப் பின்னல் மாத்திரம்தான் தெரிந்தது.