பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


‘ஒ, மைலார்ட்”-புண்ணியகோடி அவசரத் துடிப் புடன் கைவிரல்களைச் சொடுக்கிக் கொண்டார். கையி லிருந்த பையைத் திண்ணையில் வைத்து, கையை உள்ளே நுழைத்துத் துழாவினர். எடுத்த எடுப்பில் சிக்கி விட்டது, அந்தப் பழைய டைரி. அதன் ஜம்பம் அவரிடமா சாயும் புரட்டினர். -

‘ஐயா... p?

விக்ராந்தியாக திண்ணையில் உட்காரலாமென்று இருக்த அவருக்கு இப்படிப்பட்ட சோதனையா வர வேண்டும் யாரது?’ எனறு ஓங்கிய குரலில் கேட்டு விட்டு, தலையை வெளியுல்கம் நோக்கி ஒடித்து கீட்டினர். சூடுபிடிக்கத் தொடங்கியிருந்த தம்புச் செட்டித் தெருவில் கல்யான ஊாவலம் ஒன்று நெளிந்துகொண்டிருந்த காட்சிதான் அவரது விழி விரிப்பில் முலன் முதலாக ஏடு விரிந்தது. பொட்டுப் பொழுதுக்கு, கெற்றிப் பொட்டில் யாரோ, அல்லது எதுவோ தட்டிற்ைபோல் ஓர் உள்ளுணர்வு கிளர்ந்: தெழுந்தது. அப்பனைத் துணைக்கு அழைத்தார். அக்கிழல் கொடுத்த அமைதியோடு, ‘ஐயா என்று விளித்த கர2ல இனம் காண விழைந்தார் பெரிய குருக்கள். பெரிய உடம்பில் மூச்சு இரைத்த ரகசியம் அந்தக் கு ர லு க் கு உடையவருக்குத் தெரிய வேண்டாமா, என்ன? வெளியுலகம் காண ஓடிய பார்வை, அதே சடுதியில் ஓடி வந்தது, சே!

குஷ்டரோகிப் பிச்சைக்காரன் ஒருவன் வாசல் முகப்பில் கின்றான். டே, அம்பி கதவை அடைடா!’ டைம் ஆயிடுத்து!’ என்று ஆணையிட்டுப் பாசத்தின் குரலை இறக்கி வைத்து விட்டு, ‘என்னுப்பா!’ என்று முகத்தை மறுபடியும் திருப்ப ஒப்பாமல், குரலை மட்டிலும் வாசலுக்குத் திருப்பினர் முதியவர்.

‘பசிக்குதுங்க சாமி!”

பேசிச்சா சாப்பிடேன்!”

‘வழி இல்லிங்க!”