பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148


மங்களத்தின் வயிறு பற்றி எரிந்தது. கடவுளே!... என்று கொந்தவளாக வரவேற்புக் கூட த்தின் வடக்குப் பகுதிக் கதவுகளை ஆத்திரத்தோடு இழுத்துச் சாத்தித் தாழிட்டாள்.

மங்களம் அவ்விடத்தைத் தொடும் கேரத்தில்தான் பங்கஜம் அந்த மஞ்சள் பத்திரிகையைப பார்க்க நேர்ந்தது. ‘ஆ’ என்று பதட்டம் அடைந்தாள். எந்தப் பத்திரிகையில் வெளியாகியிருந்த அவதூறுச் செய்திகள் வீரபாகுவுக்கோ, அல்லது பரிமளத்தக்கோ தெரியக் கூடாது என்று கினைத்து, அதைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து வீசிேைளா, அதே பத்திரிகை இப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே விதியாக, வினையாக விசுவரூபம் எடுத்தாற்போன்று கிடந்தது. அந்தப் பத்திரிகையை எடுத்து மறைத்துவிட எண்ணி-மங்களத்தின் பார்வையினின்றும் மறைத்து விட எண்ணி, சாகசததோடு அதை ‘லபக்கென்று எடுத்தாள் பங்களுர் சீமாட்டி,

‘லிஸ்டர், அதை எங்கிட்டே தாங்க!” என்று கண்டிப்புக் குரலில் கேட்டாள் பங்களம்.

பங்கஜம் தயங்கினுள். கையிலிருந்த அந்த நச்சுப் பத்திரிகை அவளே கருவேலமுள்ளாகக் குத்திப் பிராண்டிக் கொண்டிருந்தது. பெங்களுரில் இந்தப் பத்திரிகையைப் பார்க்க நேர்ந்த சம்பவமும் அதைத் தொடர்ந்து இடம் கண்ட நடப்புக்களும் அவளது மனத்திடலில் கிழற்படம் காட்டின. ‘இந்தச் சனியன் நீங்க பார்க்கத் தேவையில்லை, அக்கா? என்று கயமாக உரைத்தாள்.

மங்களத்தின் கண்கள் தளும்பின. அந்த மஞ்சள் பத்திரிகையில் பளிச்சென்று தெரிந்த வீரபாகுபரிமளம் ஆகியோரின் புகைப்படங்களையும் தரையில் கிடந்த வீரபாகு-பரிமளம் ஆகியோரின் உருவங்களை யும் மாறி மாறிப் பார்த்தாள் அவள். தோழி பங்க ஜத்தின்-அல்ல, சகோதரி பங்கஜத்தின் கேத்திரங் களின் கண்ணிரையும் அவள் கவனிக்காமல் இல்லை.