பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155


“வழியிலே கின்னுக்கிட்டிருந்தால் எப்படி? போய், அந்த அறையிலே உட்காருங்க, கொஞ்ச கேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு, அப்புறம் சனியன் பிடித்த இந்த விவகாரத்தைப் பத்தி மூளையைக் குழப்பிக்கிட லாமே!” என்று எரிச்சலுடன் குறுக்கிட்டாள் பங்களுர் பங்கஜம. w

‘எலிஸ்டர் சொல்றது. வாஸ்தவம்தான். கம்ப பரிமளத்தோட ரூமிலே போய் உட்காரலாம். ஒரு கொடியிலே கான் போய் இன்னொரு டோஸ் காப்பி கலந்துக்கினு வந்திடறேன்’ என்றாள் மங்களம்!

‘ஓ கே!’ என்று புதிய தெம்பு பெற்றவர் மாதிரி சொல்லிக் கொண்டே, பரிமளத்துக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த-ஒதுக்கிக் கொடுத்திருந்த அறையில் பிரவேசித்தார் தொழிலதிபர் வீரபாகு. மகுடியின் இசை கயத்தில் கட்டுப்பட்ட பூ காகமாக அவரைத் தொடர்ந்தாள் குமாரி பரிமளம்.

அதோ, மங்களமும், அவளைத் தொடர்ந்து பங்கஜ மும் பின் கட்டுக்கு கடந்து கொண்டிருக்கிறார்கள்!

&  - பூஞ்சிட்டுக்கள் இரண்டு ஒன்றையொன்று அனைத்தும் விலகியும் விளையாடிக் கொண்டிருந்தன. அவை காதல் ஜோடியாகத்தான் இ ரு க் க வேண்டும்!

வீரபாகுவும் பரிமளமும் அந்தக் குருவிகளை மாறி மாறிப் பார்த்தார்கள். பிறகு அவர்கள் இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

வீரபாகுவின் மனக் கண்ணில் அந்த மஞ்சள் பத்திரிகை கிழலாடத் தொடங்கியது. அவ்வளவு தான் அவரது உக்திக் கமலத்தில் கொந்தளித்துப் புரளத்தலைப்பட்ட வே த இன யு ம் ஆத்திரமும் தொண்டைக் குழி வரை மோதத் தொடங்கி விட்டன. பரந்த நெற்றி மேட்டில் நரம்புகள் புடைத்தன. தாறு: