பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் அதை அருகிலிருந்த மேஜை மீது வைத்தார். அப்போது, காட்குறிப்பின் மேலட்டைப் பகுதி முன்வச மாக அமைந்திருந்தது. சிவப்பு பின்னணியில ஒட்டப் பட்டிருந்த அச்செழுத்துக்களிலே அவர் காட்டம் ஒடியது. ஒடிய மனவோட்டம் தடைபட்டது.

‘அதிவீரராமபாண்டியன் சிறுகதை எழுத்தாளர், சென்னை-1’ என்ற வாசகக் குறிப்பு பளிச்சிட்டது.

வீரபாகு குழம்பினர். மிஸ்டர் அதிவீரராமபாண்டி யன் டைரி இங்கே எப்படி வந்ததாம்?-அதுவும் இந்தத் தனி அறையில் பரிமளத்தின் பிரத்யேக அறையில் எப்படி வந்தது’

மூளை நரம்புகளில் வலி எடுக்கத் தொடங்கி விட்டது.

தம்மைப் பற்றிய சொந்தச் சிந்தனைகளிலேயே சில கணப் பொழுதுகளை இதுவரை ஒட்டிவிட்டு, பிறகு ஒரு மனமாற்றத்தைக் கருதி அங்கிருந்து வெளியேறி, வரவேற்புக் கூடத்தின் தென்புறம் இருந்த ஒரு ஜப்பான் பீரோவின் வெளியே இருந்த பொத்தான் ஒன்றை அழுத்தினர் வீரபாகு,

வர்ஜீனியா சிகரெட் ஒன்று வந்தது. புகைச் சுருள்கள் புறப்பட்டன.

புறப்பட்ட அமைதியைத் தட்டிப் பறிக்க அதோ அவள் தரிசனம் தந்து விட்டாள்!

மஞ்சள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த புகைப் படங்கள் பங்களுர் மஞ்சள் பத்திரிகைக்காரனுக்கு எப்படிக் கிடைத்தன என்ற ஆலோசனையில் ஈடுபட்ட போதுதான், வீரபாகுவின் முன்னே ஒரு கனைப்புத் தொனி எழுப்பிக் கொண்டே வந்து கின்றாள் அந்த அழகி. .

யோ! நீ ஏன் இங்கே வந்தாய்?...இந்த மாதிரி பெண்கள் என்னைத் தேடி என்னுேட பங்களாவுக்கு