பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159


யாருமே இதுவரை வந்ததில்லையே?...சே!... மனிதன் அவனுக்கு விதித்த இலட்சுமணன் கோட்டை தாண்டும்போது, அவன் எப்படிப்பட்ட சோதனைகளை

யெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது?...’ வீரபாகு உரத்த குரலெடுத்துச் சத்தம் போட்டார்.

முன்பு தப்பி விட்டதாகப் பெருமைப் பட்டுக் கொண்ட குற்ற உணர்வு இப்போது தலைகுனிய நேர்ந்தது.

சே! கான் மிருகம்!’ என்று அளவு மீறிய எரிச்சலுடன் கூவிக் கொண்டே சிகரெட் புகையை உறிஞ்சினர்.

சிகரெட்டுத் துண்டில் இருந்த நெருப்பு அவரது

உதடுகளைச் சுட்டது. சுட்டதோடு சரி. சுட்டெரித்து: விடவில்லை!

வந்தவள், மறு பேச்சாடாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

ஒருவேளை, அவருடைய சிகரெட்டுத் துண்டின் கெருப்பு அவளைச் சுட்டெரித்து விட்டிருக்குமோ?

அவள் ...?

o {} ‘அம்மா! பரிமளம்.!...” என்று அன்புடன்

அழைத்தார் வீரபாகு.

குமாரி பரிமளம் கிழற்பட உருவத்தில் அந்த அறையில் காட்சி தந்தாள்!

பேசும் விழிகள்.

அவை பிறரைப் பேச வைக்கும்.

பேசாத இதழ்கள். அவை பிறரைப் பேச வைக்காது. பூஞ்சிட்டுக் கன்னங்கள். து.ாய கனலின் வடிவம் கொண்டு, பரிமளமே

ரோக, மலராக மணமாக, அங்கு தரிசனம்

காடுததாள.