பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160


நெற்றியில் நீறு. நீள் விழிகளிலே கனவு. கன்னங்களின் குழிவில் அழகின் சிரிப்பு. அந்தத் திருஷ்டி மச்சம்!. ஆஹா!... அவள் பெண் தா:ை இல்லை...தெய்வமா?

வீரபாகுவின் நெஞ்சில் அம்பிகை சிலையோடிள்ை. அவரது கைகள் பரிமளத்தின் படத்தை நோக்கிக் குவிந்தன. அம்மா பரிமளம்...என் தெய்வமே!’ கண்கள் பொடித்தன.

மங்களமும் பங்கஜமும் காப்பிக் கோப்பைகளை ஆளுக்கொன்றாக ஏந்தியவாறு அந்த அறைக்குள் நூழைக்தார்கள்.

‘அப்பா! அப்பா!... விதி விளையாடவில்லை மணி தர்கள் தான் விளையாடுகிறார்கள் என்று நான் சொன் னேனே! அது முற்றிலும் உண்மைதான் அப்பா! இந்த ஈவிரக்கமற்ற பாதகச் செயலுக்கு உடந்தையாக இருந்தவர்களை நான் கண்டு பிடித்து விட்டேன். அப்பா!’ என்று கூவினுள் பரிமளம். அவள் கையில் அவளது புகைப்படம் ஒன்று இருந்தது. கழுத்துச் சங்கிலி ஊசலாடியது.

“அப்போது’

‘ஸார்!’ என்று அழைப்பு விடுத்தவாறு வந்து கின்றான் சிறுகதை மன்னன் அதிவீரராமபாண்டியன்.