பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169


அவளது குழற்கற்றையினின்றும் சிதறிய மல்லி கைப்பூ ஒன்றைப் பாண்டியன் குனிந்து எடுத்தான். கிமிர்ந்தான் அவனையே இமை பரவாமல் பார்த்து கின்ற பரிமளத்தின் மார்பகத்தில் அவனுடைய இடித்தது.

‘ஒ.ஐ.ஆம் ஸாரி” என்று மன்னிப்புக் கோரிச் சிரித்தான். தன்னுடைய ஜரிகைக் கரை வேட்டியின் முனையோடு பரிம்ள ததின் டெரின் புடவையின் கீழ் முனைப் பகுதி உரசிக் கிடந்ததையும் அவன் கண்டு கொண்டான். பிறகு, அேைள விழுங்குபவனைப்போல ஏதோ ஒரு புது வெறியுடன் பார்த்தான் பாண்டியன்.

பரிமளம் ஒதுங்கி நின்றாள். பாண்டியனின் விழிகளை ஊடுருவிள்ை. கண் இமைகள் பட்டுப் பூச்சி களாகத் துடிக்கத் தொடங்கின. -

‘பாண்டியன்! நீங்க குடிச்சிட்டு வந்திருக்கீங்க? எஸ்.ஐ ஆம் கரக்ட்! இல்லீங்களா?’ என்று உக்கிரத் தோடு கிர்த்தாட்சண்யமான குரலில் கேட்டாள் பரிமளம்,

‘நானும் உன்னுடைய அன்புக்குரிய வீரபாகு மாதிரி குடித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன்!...நான் குடித்ததற்கச் சாட்சி இல்லே! ஆல்ை உன்னுடைய வீரபாகு குடித்ததற்கு தேவமனுேஹரி சாட்சியிருக் கிருள்!...புதிராக இருக்கிாதா ப மளம்?...வாழ்க்கை யையும் காதலையும் விதியையும் மட்டுமே புதிர் என் கிறார்கள். அந்தப் பட்டியலில் பெண்ணையும் சேர்ப் பார்கள் கதாசிரியர்கள்! ஆனுல் கான் வீரபாகுவுக்குத் தான் புதிர்ப் பட்டியலுக்குத் தலைமைப் பதவி கொடுப் பேன்! பாவம், உன் நேசத்துக்கு உகந்த வீ. பாகுவை இப் டி ஏசுவதைக் கண்டு நீ என் பேரில ஆத்திரப்படு

வாய்!... பாவம்’

பரிமளம் பெண் தானு?

இல்லை, காளியா?