பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172


‘பரிமளா!...” என்று ஓங்காரக் குரலெடுத்து மூர்த்தண்யமான பாவனையில் அ ல ட் டி னு ன் பாண்டியன்,

பரிமளம் சடக் கென்று திரும்பிப் பார்த்தாள். மகுடிக்குக் கட்டுப்பட்ட கல்ல பாம்பாகத் திரும்பிப் பார்த்தாள் அவள். பரிமளா என்ற அந்தச் சொல் அவளது கன்னி மனத்தில் ஏதேதோ கினைவலைகளைத் தோற்றுவித்திருக்க வேண்டும் போலும்! பரிமளா!'அவளே தன் பெயரைத் தனக்குத்தானே ஒருமுறை உச்சரித்துக் கொண்டாள். அவளது சக்திர பிம்ப வதனத்தில் முற்றுகை இட்டிருந்த கோபமும், ஆத்திர மும் சிறுகச் சிறுக மாறத் தொடங்கின.

புயல், தென்றலாகவும் மாறி விடுமோ?

பாண்டியனைக் குறி வைத்து கடந்தாள் அவள், அன்னப் பேடையென கடந்தாள். கிமிர்ந்த கன்னடை யும் நோ கொண்ட பார்வையும் துலங்க நடந்தாள்.

அப்போது புயல் சூருவளியாக மாறிவிட்டிருந்தது.

“பரிமளம்!” என்று அலறிஞன் சிறுகதை மன்னன்.

‘பரிமளம்'-இந்தப் பெயர் உச்சரிப்பு அவளது உக்திக்கமலத்தில் ப்ரண அடியாக விழுந்திருக்க வேண்டும்! துடித்தாள்; துவண்டாள்.

அவனை அறைந்தாளே அந்த அறையை விடவா, இப்போது அவள் மனத்தில் விழுந்து விட்ட அடி அவ்வளவு வலியை உண்டாக்கி விட்டது! மகுடியின் காதம் அடங்கியதும், கல்லபாம்பு படமெடுக்குமே அப்படி பரிமளம் ஆள்ை, பரிமளமாம்!...பரிமளம்: அவள் பற்களைக் கடித்துக் கொண்டாள். -

தோன் அசல் தமிழச்சி!” என்றான் அவன். வர்வழைக்கப்பட்ட பொய்ச் சிரிப்பு-போலிச் சிரிப்பு கூட அவனை வஞ்சித்து விட்டது. -