பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177


சிகரெட் புகையை வெறியுடன் உறிஞ்சி வெளி பிட்டான் பாண்டியன்,

கேட்பாரற்றுக் கிடந்த பாண்டியனின் சிகரெட்டுப் பெட்டியை காலால் எற்றி விட்டுவிட்டு அவனை மேலும் நெருங்கி வந்தார் தொழில் பிரமுகர் வீரபாகு.

இப்போது, பரிமளம் உடுத்தியிருக்த புடவையின் கீழ்முனைப் பகுதி பாண்டியனின் ஜரிகை வேட்டியோடு உரசிக் கொண்டிருக்கவில்லை.

எதிர்பாராத ஒன்று மீண்டும் கடக்கப் போகிறதோ என்று சந்தேகப்பட்ட பாண்டியன் எதற்கும் தயாரான கிலேக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்டான். ஆத்திரம் பொங்க வந்து கின்ற வீரபாகுவின் முகத்தோற்றம் அவனை விழிப்படையச் செய்தது. இடுப்பு வேட்டியை எச்சரிக்கையுடன் அழுத்தமாகச் செருகின்ை.

“பாண்டியன்! என் மகள் பரிமளத்தை சக்தேகம் கொள்ள, அவள் கற்பின் மீது ஐயப்பாடு வைக்கஅவளைப் பதிவிரதையா இல்லேய என்று கேள்வி தொடுக்கச் செய்தது. நீங்க கொடுத்துச் சென்ற இந்த மஞ்சள் பத்திரிகை தானே?...’ என்று இரைச்சல் போட்டுக் கேட்டுக் கொண்டே, மங்களம் பற்றின்றிப் பற்றி கின்ற அந்த மஞ்சள் பத் திரிகையைப் பிடுங்கி அதை அவன் முகத்தில் விசிறியடித்தார் வீரபாகு,

சிறுத்தைக்கு ஒரு விசித்திரமான கு ைம் ... உாம். சில தருணங்களில் அதையும் மீறிய விதத்திலே, அது தன்னுடைய ஆத்திரததை வேண்டுமென்றே அடக்கிக் கொள்ளுமாம். ஆனுல் சில வேளைகளில், அது விரும்பியபடியே தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டி விடுமாம்.

முகத்தில் உராய்ந்து விழுந்த மஞ்சள் பத்திரி கையை ஒருமுறைப் பார்த்துவிட்டு, அதே பார்வையால் தொழிலதிபர் வீரபாகுவையும் குமாரி பரிமளத்தையும் அளந்தான். மறு இமைப்பில், ‘கான் புலி, சிறுத்தைப் புலி, புலியைப் பற்றி உங்களுக்குத் புரியாத்து