பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193


பரிமளத்தின் பூங்கரங்களைப் பற்றி கின்றதால் விளைந்து கொண்டிருந்த இன்ப ஸ்பரிசத்தின் உணர்வு களிலே மெய்ம்மறந்து நின்றவன், விழிப்படைந்தான்.

‘பரிமளா! தெய்வத்தை இப்படிக் கண்கலங்க வைத்து விட்டேனே! பாவி நான்! என்று தொண்டை அடைக்கச் செப்பின்ை அவன். எைைன மன்னிக்க மாட்டியா பரிமளம?’ என்று வேண்டினுன். கண்கள் கசிந்தன.

அவள் சிரித்தாள். வேதனை சிதருமல் விரக்தி, மாருமல் சிரித்தாள். வெளிவ சனத்தில் பூத்திருக்த முல்லைப் பூக்களைப் பற்களாக்கிக் கொண்டு அழகாகச் சிரித்தாள் பரிமளம். பட்டிதழ்ப் புன்னகையில் படைப் பின் ரகசியம் மெட்டிசைத்தது போதையும் போதமும் சுழித்திட்ட அந்தக் கவர்ச்சியில், கன்னங்கள் குழிந்தன மூக்குத்திக் கற்கள் பளிச்சிட்டன. அந்தப் பிரகாசத்தில் இடது கன்னத்தின் திருஷ்டி மச்சம் பான் ைபோடு பொலியத் தொடங்கியது ‘பாண்டி பன்! நான் பெண்ணல்ல!” என்று விம்மிளுள் குமாரி பரிமளம்.

‘நீ பெண் அல்ல; பூலோகத் து மானிடப் பெண் அல்ல!” என்று முறுவல் பூத்தான் பாண்டியன்.

‘ஊஹல்ம்...நான் ...??

ஆரம்பித்த சொற்களுக்கு முடிவு சொல்ல அவனே அனுமதிக்க வில்லை. அவன் அதற்குள் அவள் உதடுகளைத் தன்னுடைய நடுங்கிய கைவிரல்களால் பொத்தி விட்டான்.

இதயத்தைத் திறந்து காட்டத் துடித்தவளாக, சற்றே விலகிள்ை குமாரி பரிமளம. இப்போது அவளது செவ்விதழ்களை பாண்டியனின் கைகள் மூடி விட முடியவில்லை. ‘பாண்டியன்! உங்களை-பிரபல் எழுத்தாளரான உங்களை நான் அறைஞ்சு போட்டுட் டேன்! ஐயையோ!...” என்று சுடர் விளக்காகத் துடித்தாள் அக்கன்னி இளமான்.