பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203


இத்தகைய அவனுடைய சேஷ்டைகள் ஏதோ விசேஷங்கள் இருக்கின்றன என்பதற்கு உ ரி ய சமிக்ஞைகள் என்பதை உணர்த்தின. பாண்டியனின் மனம்-ரசிக மனம் அலை பாயத் தொடங்கியது.

“பிஸ்கட் பிராந்தி ரெடி’ என்றான் காசி.

மீண்டும் பாண்டியனின் அழகான நாசிகளில் அந்த வாசனை வீசியது.

‘ஊம்...அப்புறம்...?’ என்றான்.

தொழிலதிபர் வீரபாகுவின் பங்களாவுக்கு சினிமா நேசன் மஞ்சள் பத்திரிகையைச் சுமந்து கொண்டு, குழப்பம் சூழ்ந்த மனத்தையும் சுமந்து கொண்டு செல்ல முற்பட்ட கேரத்தில், குழப்பம் திரும்’ என்ற சபலத்தில் இ | ண்டு பெக் விஸ்கியைப் பருகிச் சென்ற தையும், விஸ்கியின் வாடையைப் புரிந்து கொண்ட பரிமளம் தன்னை ஏசிப்பேசியதையும் அப்புறம் தன்னு டைய மிருதுவான கன்னங்களிலே பலமாக காலு அாைகளைப் பரிசாகக் கொடுத்த நிகழ்ச்சியையும் அவன் தன்னுடைய டைரியிலே குறித்துக் கொள்ளத் துணிவு பெருவிட்டாலும், அங்கிகழ்ச்சிகளை அவனது மனச்சாட்சி என்றென்றுமே குறித்துக் காட்டத் தவரு தென்ற உண்மையை அவன் அறியாமல் இல்லை, ஆகவே, அந்தத் துயருக்கு-அவமானத்தின் துயரத் துக்கு மாற்றாக மீண்டும் பங்களாவுக்கு வந்ததும் குடிக்க வேண்டும் என்று திட்டமிருந்தன. வேளை கூடி வந்து விட்டது:


‘தம்பி, உள்ளே பாருங்க!” என்று குழைந்தான் காசி. ஐம்பத்தைந்து வயது ஆனவன் மாதிரியா காசி யின் நடிப்பு இருந்தது? பாண்டியன் எடுக்கத் தொடங்கிய படத்தில் காசியின் பதவிக்கு குந்தகம் ஏற்படாத வகையில், அந்தப் படத்திலேயும் சமையற் காரன் வேஷத்தை கொடுத்து விட்டானே பாண்டியன்! படம் முடிந்து விடும் என்று பாண்டியன் சொல்லி,