பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. மோகினி அவதாரம்

தின்ேகு சுவர்களுக்கு கடுவில், ஆண்மையும் பெண்மையும் விதியைப் பார்வையாளனுக ஆக்கி சித்து விளையாடிக் காட்ட மனம் இசைந்த மாதிரி, அழகின் தேவதை மோகினியும் சிறுகதை மன்னன் அதிவீரராமபாண்டியனும் அப்போது மெளனப் பிண்டங்களாகச் சில வினுடிகள் வரை அமர்ந்திருக் தார்கள். அப்பொழுது அங்கு கிலவியிருந்த அகத மெளனமே ஒரு பா ைஷ யாக விளங்கியதோ என்னவோ?

மாடியில், குஷன் சோபாவில் கம்பீர ஒயிலுடன் தோகை மயிலாக வீற்றிருந்த மோகினியையே இமைக் காமல் பார்த்தான் பாண்டியன்: - .

திறந்து கிடந்த அறையின் கதவுகளைத் தாழிட்டுத் திரும்பிய பாண்டியனை வியப்புடன் பார்த்தவாறு இருந்த மோகினியின் கண்களிலே சாகசம் ஒளி கக்கியது. எதிர்பார்த்த எதோ ஒன்று எதிர்பாராத வகையில் பலித்து விட்ட மகிழ்வு அவளது சிந்துணரக் கன்னங்களிலே ரேகை பதித்தது. சுழன்ற மின்விசிறி யில் சுழன்ற சுருள் இழைகளை ஒழுங்கு படுத்தினுள். பிறை நெற்றியின் ம்ையத்தில் ஒளிர்ந்த பிறைத் திலகத்தைச் சீர்செய்தாள். மார்பகத்தின் தசைப் பகுதிகளைச் சன்னமாகத் திரையிட்டுக் கொண்டு சற்றே கிமிர்ந்து அமர்ந்தபோது, பாயத்துடிக்கும் வேங்கையை அவள் தோற்றம் நினைவூட்டியது. இப்போது மோகினி யின் பார்வை பாண்டியனை நோக்கிப் பாய்ந்தது. தன்னையே விழுங்கி விடத் துடிப்பவனுகப் பார்த்துக் கொண்டிருந்த கற்பனையாளன்சின் கிலே கண்டு, அவள் போதைப் புன்னகையை வெளிப்படுத்த முனைந்தாள். “மிஸ்டர் பாண்டியன், என்ன அப்படிப் பார்க்கிநீங்க?” ன்ன்றாள், சாதுரியம் தொனிக்க, மோகப் ப்ருக்கள் அழகு கூட்டின. பூக்காடு மணம் கூட்டியது.