பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209


பல முறை வந்தலைக்த விவரத்தையும் அவன் நினைவு

கூறத் தவறவில்லை. யாரையும் மேலே அனுப்பக்

கூடாது என்று ஆணை இட்டானே பாண்டியன்:

காலம் கிற்குமா? -

கன்னங்களை வருடிக் கொண்டான். அவன். கன்னங்களிலே பரிமளா அறைந்த நிகழ்ச்சி ஊறத் தொடங்கியது. சினிமா கேசன்’ மஞ்சள் பத்திரி கைக்கு கான் உன் போட்டோவை அனுப்பவில்லை? என்று உறுதி மொழிந்ததையும் எண்ணமிட்டான். அதோ பரிமளம் கொடுத்த அவள் புகைப்படம் சுவரை அலங்கரிக்கிறதே!-அப்படியென்றால், பரிமளத்தின் புகைப்படத்தை சினிமா கேசனுக்கு யார் அனுப்பி யிருப்பார்கள்? வீரபாகுவின் பட்ம் யாருக்குக் கிடைத் திருக்கும்? பெங்களுர் பத்திரிகைக்காரனுக்கு பரிமளத் தின் படமும் வீரபாகுவின் படமும் எப்படிக் கிடைத் திருக்கும் ‘தொழிலதிபர் வீரபாகு-அைைத அழகி குமாரி பரிமளம் காதல் லீலைகள்’ என்ற தலைப்பு வாசகத்திற்கு அடிப்படையான உண்மை என்ன? இச் செய்தியே உண்மையா குமாரி பரிமளம் தொழிலதிபர் வீரபாகுவின் சொந்த மகளா? எல்லாம் புதிராகத் தோன்றுகிறது! சிகரெட் மீண்டும் புகை பரப்பியது. காலையில் இங்கே வீரபாகுவும் பரிமளமும் வருகிறார் களாம்!”

காலம் ஒரு புள்ளிமான்...’ என்று மெளனத்தைக் கலைத்தாள் மோகினி. -

அவளே ஏறிட்டுப் பார்வையிட்டான் பாண்டியன். சாதுரியம் மிகுந்த சாகஸம் பூண்டு அவள் விளங்கிய கோலத்தை அவனுல் உணர முடியாமல் இல்லைதான்.

காலம் ஒரு புள்ளிமான் அழகான உவமை, என்னுடைய கண்பர் பூவையின் உவமை இது?

‘நீங்களும் நினைவு வைத்திருக்கிறீர்கள். பேஷ்! சரி..நேரம் ஆக வில்லையா?” என்று துரண்டினுள். அவள் கண்களின் போதை, போதைப் பொருளில் ஆங்ாகமாக நெளிந்தது. -- o